ராமதாஸ் விருந்து முடிந்து திரும்பிய தலித் எம்.பி மரணம்!

ராமதாசுக்கு எதிராக காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் ஆலோசனை!

40 ராணுவ வீரர்கள் மரணத்தை வைத்து வாக்கு கேட்கும் பாஜக!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாமக-அதிமுக கூட்டணி உருவானது. இதையொட்டி டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அதிமுகவினருக்கு விருந்து அளிக்கப்பட்டது.இந்த விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய தலித் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் விபத்தில் பலியாகி உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் விழுப்புரம் தொகுதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டு வென்றவர் ராஜேந்திரன். மனைவி சாந்தா ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவருக்கு திவ்யா, தீபிகா என்ற இரு குழந்தைகள் உள்ளார்கள். 2001 முதல் 2006 வரை விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக இருந்தார். தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாய அணிச் செயலாளராக இருந்தார். முதன் முதலாக எம்.பி பதவிக்கு போட்டியிட்டு வென்றார் ராஜேந்திரன். அதிமுக-பாமக இடையே கூட்டணி உருவானதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் அவர்களின் தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. எம்.பிக்களுக்கும், முதல்வர்,துணைமுதல்வருக்கும் கறி சோறு விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் கலந்து கொண்ட ராஜேந்திரன் சொந்த ஊரான வானூருக்குச் சென்றார். பின்னர் அதிகாலை நான்கு மணியளவில் விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல காரில் வந்த போது திண்டிவனம் பைபாஸ் சாலையில் தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில், டிரைவர், உதவியாளர், எம்.பி.ராஜேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் அங்கு உயிரிழந்தார்.
அரசியல் கூட்டணிக்காக ராமதாஸ் நடத்திய கறிவிருந்தில் பங்கேற்று விட்டு திரும்பிய தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ராஜேந்திரன் பலியாகி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
#தலித்_எம்_பி_ராஜேந்திரன் #விழுப்புரம் #ராமதாஸ்_கறிசோறு_விருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*