
இளையராஜா ‘75’ பிரமாண்ட ஏற்பாடுகள்!
இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோடி:-“மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைவருக்குமானது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வண்ணம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கம், விவசாயிகள், சிறுதொழில் செய்வோர் என அனைவரையும் பாதுகாக்கும் பட்ஜெட். தேர்தலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான ட்ரெய்லர்தான் இந்த இடைக்கால பட்ஜெட். விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வருவான உதவித்திட்டம் 12 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும். இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களில் அதிகமாக விவசாயிகளே பயன்பெற்றுள்ளார்கள்.
சமூகத்தின் கடைக்கோடி குடிமகனுக்கும் இத்திட்டம் சென்றடையும் ஒவ்வொரு குடிமகனும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் வகையிலான திட்டங்கள் இதில் உள்ளன. ஆயுஷமான் பாரத், பிரதான் மந்திரி யோஜனா திட்டங்களால் மக்கள் அதிக அளவு நன்மை அடைவார்கள்”என்று மோடி கூறியுள்ளார்.
#2019_பட்ஜெட் #2019_Budget #Modi_Budget
ஜாக்டோ ஜியோ போராட்டமும் சமூக ஊடகங்களும்-அ.மார்க்ஸ்
தமிழிசையை அவமானப்படுத்திய பாஜக ஆதரவு தினமலர்!
Be the first to comment