வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது!

காஷ்மீர் பயங்கரவாத  தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்?

காஷ்மீர் -பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவத்தினர் 40 பேர் பலி!

முன்னாள் பிரதமரும் பாஜக முன்னாள் தலைவருமான வாஜ்பாய்  பிரதமராவதற்கு முன்னர் கார்கில் போர் நடத்தப்பட்ட நிகழ்வை பலரும் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலாக ஆட்சி இருந்து வந்தது. பிரச்சாரத்திற்காக பிப்ரவரி 14-ம் தேதியில் அத்வானி தமிழகம் வந்தார். அப்போது பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. அதில் 50 பேர் உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஆளும் திமுகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்று அசத்தியது. அதில் அதிமுகவிற்கு 18 இடங்கள் கிடைத்தன. இதையடுத்து அதிமுக ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது.

ஆனால், வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற சில நாட்களிலேயே திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்தார். ஜெயலலிதாவின் பரிந்துறையில் பலருக்கு அமைச்சர் பதவி கிடைத்த போதும் திமுக ஆட்சியை கலைக்க மறுத்து விட்டாய் வாஜ்பாய். இதையடுத்து 1999 –ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டார் ஜெயலலிதா. இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் வாஜ்பாய் ஆட்சி ஒரு வாக்கு வித்தியாசத்தில்  ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அரசு அமைக்க முடியாத நிலையில், இடைக்கால பிரதமராக வாஜ்பாய் தொடர்ந்த போது கார்கில் போர் வெடித்தது 1999 மே- ஜூலை மாதங்களில் நடந்த போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த போர் ஒரு தேசிய அளவில் வாஜ்பாய்க்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்கும் தேர்தல் யுத்தியாக மாற்றபப்ட்டது. 1999 தேர்தலில் கூட்டணியும் வலுவாக அமைந்த காரணத்தால் பாஜக தேசிய அ
ளவில் 270 இடங்களில் பாஜக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. இக்கூட்டணியில் திமுகவும் இடம் பெற்றது. ஆனால், கார்கில் போர்  தேர்தல் வெற்றிக்கு கைகொடுத்தது என்கிற பார்வை அரசியல் அரங்கில் வலுவாக  முன் வைக்கப்பட்டது.

#நாடாளுமன்ற_தேர்தல் #2019_தேர்தல் #நாடாளுமன்றதேர்தல்

”எய்ம்ஸ் நிதியா எங்களுக்கு தெரியாதே?” –கைவிரித்த மத்திய அரசு!

 

 

“நாங்கள் சாதி மதமற்றவர்கள்” இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு சான்றிதழ் பெற்ற தம்பதிகள்!

மோடியின் கோட்டையில் இருந்து நாளை பிரச்சாரத்தை துவங்கும் ராகுல்காந்தி!

அதிமுக தம்பிதுரையின் பாஜக மீதான பொய்க்கோப நாடகங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*