விடுதலையாகிறார் சசிகலா?

#Save_chinnathampi யானை பற்றிய ஆச்சரிய தகவல்கள்! 50 Interesting Facts About Elephants

தம்பிதுரையை வைத்து நாடகமாடும் எடப்பாடி பழனிசாமி!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூரு பரப்பன் அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா  சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.  இதில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா உள்ளிட்டோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.  இந்த வழக்கில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும்  தலா நான்காண்டுகள் சிறையும் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது, சசிகலாவுக்கு 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட போது நீதிபதி குமாரசாமி நால்வரையும் விடுவித்தார். இந்த  தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய 2017-ல் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் இதில் ஜெயலலிதா இறந்து விட்ட நிலையில், சசிகலா, உள்ளிட்ட மூவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

இதனையடுத்து  சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.  சிறையில் இவர்கள் விதி மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வருகிற 15-ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகளை சிறையில் நிறைவு செய்கிறார் சசிகலா.

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி அபராதத்தை இன்னும் வருமானவரித்துறை வசூலிக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், சசிகலா செலுத்த வேண்டிய 10 கோடி அபராதத்தை  முழுமையாக வசூலித்து விட்டதா என்பது பற்றியும் தகவல்கள் இல்லை. சிவில்  வழக்குகளில் சிறையில் உள்ள சிறைவாசிகள் தங்கள் சிறை தண்டனையின் இரு மடங்கு காலத்தை சிறையில் கழித்து விட்டால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்கிறது சிறை விதிகள்.  சிறை தண்டனை பெறும் காலத்தில் வேறு தவறுகள் எதுவும் செய்திரா விட்டாலும் அவர்கள் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு உள்ளதாக  விதிகள் உள்ளது. இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று தெரிகிறது.

பாஜக கூட்டணிக்குள் தினகனரனை கொண்டு வர பாஜக விரும்புகிறது. ஆனால் அவர்கள் குடும்பத்தை பாஜக ஆடிட்டர் குருமூர்த்தி பழிவாங்கி  விட்டதாக பொதுவாக ஒரு நம்பிக்கை உள்ளது. அதில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்னும் நிலையில், சசிகலா விடுதலையாக பாஜக அரசும் ஒத்துழைப்பு நல்கும் எனத் தெரிகிறது. சசிகலா விடுதலை ஆனால் மட்டுமே தினகரனோடு நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்படும் என பாஜக நம்புவதால் சசிகலா விரைவில் விடுதலையாகலாம்.

#சசிகாலா #Sasikala #Amma_makkal_munnetra_kazakam #TTV_Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*