ஸ்டாலினால் மோடியை தோற்கடிக்க முடியும் -அரவிந்த் கெஜ்ரிவால்!

#பேரன்பு –ஷர்மிளா செய்யத்!

பாசிஸம் 2.0: ஆனந்த் டெல்டும்டே கைது..!

மாயாவதி,மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஸ்டாலினால் மட்டுமே மோடியை தோற்கடிக்க முடியும். காங்கிரஸ் கட்சியால் மோடியை தோற்கடிக்க முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆற்றிய உரையில்,
“உத்தரபிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , தமிழகத்தில் ஸ்டாலின் ஆகியோரால் மட்டுமே பாஜகவையும் மோடியையும் தோற்கடிக்க முடியும். அதே போன்று டெல்லியில் அக்கட்சியை நாங்கள் தோற்கடிப்போம். டெல்லியில் ஏழு மக்களவை தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்தால் கூட அக்கட்சியால் மோடியை தோற்கடிக்க முடியாது. ”என்று பேசினார்.
பாஜாகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இருந்தது. ஆனால், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் மெகா கூட்டணி என்பது அமையாமல் போகும் சாத்தியமே உள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*