ஸ்டாலின் மருமகனைக் குறிவைக்கும் மோடி!

பாஜக கூட்டணி – அதிமுக பிளவு படும்- உளவுத்துறை ரிப்போர்ட்!

தமிழகத்தில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெரும் என்ற என்ணம் பரவலாக உள்ளது, மேலும் கருத்துக்கணிப்புகளும் இதையே உணர்த்துகிறது. இந்நிலையில், மக்களிடமும் பொதுவாக ஸ்டாலினுக்கு ஓரளவுக்கு நன்மதிப்பே உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுக்க ஸ்டாலின் மக்களைச் சந்தித்து ஊராட்சி சபை கூட்டம் என்ற சந்திப்பை நடத்தி வருகிறார்.  இந்த சந்திப்பை  ஒரு முக்கிய ஏஜென்சி ஒன்றின் மூலம் வடிவமைத்துக் கொடுத்தது ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான். அது மட்டுமல்லாமல்  திமுகவின் ஒவ்வொரு அசையும் சபரீசன் கையில்தான் உள்ளது.  ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதால் அதே வழியில் உதயநிதியும் களமிரங்கி விட்ட நிலையில், திமுகவுக்கு கடிவாளம் போட நினைக்கும் மொடி சபரீசனை முடக்க நினைப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. திமுகவின் முதுகெலும்பாக சபரீசன் உள்ளதால், அவரது முதலீடுகள், நிலப்பரிவர்த்தனைகள் தொடர்பாக கோப்புகளை வருமாவரித்துறை மூலமும், உளவுத்துறை மூலம் நோண்டிக் கொண்டிருக்கும் மோடி தேர்தலுக்கு முன்னர் ஒரு பிம்பச் சிதைப்பை திமுகவுக்கு ஏற்படுத்த நினைக்கிறார். விரைவில் சபரீசன் திமுக தொடர்பான நிறுவனங்களில்  ரெய்ட் இருக்கலாம். ஆனால், அது அதிமுக முகாம்களை குறிவைத்து நடந்ததை விட மிக மோசமான அனுபவங்களை திமுகவுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு மேற்கொள்ளப்படும் ஆபரேஷனாக இருக்கும் என்கிறது தகவலறிந்த வட்டாரங்கள்.

#sabareesan_stalin # sabareesan_dmk # stalin #சபரீசன்_ஸ்டாலின்

உயிருக்கு அஞ்சி சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்ட அன்ன அசாரே!

திமுகவுக்கு தூதுவிட்ட பாரி வேந்தர் – ஜெர்க் ஆன திமுக!

“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்

பாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*