40 ராணுவ வீரர்கள் மரணத்தை வைத்து வாக்கு கேட்கும் பாஜக!

இராணுவ வீரர்களின் மரணத்தை யாரும் அரசியல் ஆக்கக் கூடாது என பாஜக கூறி வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என அறிவித்தது. இந்நிலையில், 40 ராணுவ வீரர்களின் மரணத்தை வைத்து பாஜக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்கும் பணியை துவங்கியிருக்கிறது.
புல்மாவாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த திவீரவாதியால் தற்கொலை படை தாக்குதல் மூலம் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் அதில் கேரள மாநில வயநாட்டைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப்ஃ வீரர் வசந்த குமார் விவியும் உயிரிழந்தார், அவரது உடல் தேசியக் கொடி போர்த்தப்பட்டு சொந்த ஊருக்கு வந்தது. அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக அமைச்சர் அல்போன்ஸ் கன்ணந்தானமும் கலந்து கொண்டார். இறுதி சடங்கின் போது அவர் ராணுவவீரரின் சடலத்துடன் செல்பி எடுத்துக் கொண்டது அங்கு இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. சமூக வலைத்தளத்தில் அவரது இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பல இடங்களில் மோடிக்கு அளிக்கும் வாக்கு தீவிரவாதிகளுக்கு எதிராக போராடும் இராணுவ வீரர்களைப் போன்றது என்று பாஜகவுக்கு வாக்கு கேட்டு பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
#bjp #2019_elaction #நாடாளுமன்ற_தேர்தல்

வாஜ்பாய்க்கு ஒரு கார்கில் போர் தேவைப்பட்டது!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – கசிந்து இராணுவ விட்டதா ரகசியங்கள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*