#Gobackmodi அஸ்ஸாம், ஆந்திராவிலும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு!

#Cellphone_Sivakumar மீண்டும் செல்போனை தாக்கிய நடிகர் சிவக்குமார்- VIDEO!

ஸ்டாலின் மருமகனைக் குறிவைக்கும் மோடி!

நாளை பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக பிரதான சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. மேலும் #Gobackmodi என்ற பெயரில் தமிழகத்தில் உருவான ஹேஷ்டேக் மீண்டும் மீண்டும் டிரெண்டிங் ஆகி அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.


2014 -ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது சமூக வலைத்தளங்களில் அவருக்கு பெரும் செல்வாக்கு காணப்பட்டது. அதை முதன்முதலாக உடைத்து #Gobackmodi என்ற ஹேஷ்டேக் மூலம் எதிர்ப்பை பதிவு செய்து உலக அளவில் டிரெண்டிங் செய்தவர்கள் தமிழக மக்கள். அதுதான் மோடிக்கு எதிராக முதன் முதலாக உலக அளவில் டிரெண்டிங் ஆன ஹேஷ்டேக். அதன் பின்னர் அவர் மதுரைக்கு எய்ம்ஸ் விழாவுக்கு வந்த போது உலக அளவில் முதலிடம் பிடித்தது. இப்போது அவர் நாளை ஆந்திராவுக்கும், தமிழகத்தின் திருப்பூருக்கும் வரவிருக்கும் நிலையில் மீண்டும் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது #Gobackmodi இது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாளை ஆந்திர மாநிலம் வரும் பிரதமர் பெட்ரோலிய எரிவாயு திட்டங்களை துவங்கி வைக்கிறார்.நெல்லூரில் பாரத் பெட்ரோலிய கடலோர முனையத்தையும் துவங்கி வைக்கிறார்.பின்னர் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மோடியின் வருகைக்கு எதிராக ஆந்திராவின் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களை நடத்துகின்றன. இந்நிலையில். கன்னவரம் விமான நிலையம் முதல் விஜயவாடா வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த பலகைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நாளை தமிழகம் வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதால் தமிழகத்திலும் பரபரப்பு நிலவுகிறது.
#கருப்புக்கொடி #திருப்பூர்_மோடி ##Gobackmodi

 

பாஜக கூட்டணி – அதிமுக பிளவு படும்- உளவுத்துறை ரிப்போர்ட்!

உயிருக்கு அஞ்சி சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்ட அன்ன அசாரே!

திமுகவுக்கு தூதுவிட்ட பாரி வேந்தர் – ஜெர்க் ஆன திமுக!

“என்னைக் கவர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்” -விஜய் சேதுபதி பெருமிதம்

பாட்டாளி மக்கள் கட்சி- பாஜக கூட்டணி- பேச்சுவார்த்தை அதிமுகவுடன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*