#Gobackmodi ஏன் மீண்டும் மீண்டும் டிரெண்டிங் ஆகிறது!

#Gobackmodi அஸ்ஸாம், ஆந்திராவிலும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு!

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் #Gobackmodi என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆகும் நிலையில், இப்போது அவர் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும் அவருக்கு எதிர்ப்பாக இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
கடந்த ஆண்டு தமிழகம் வந்த மோடிக்கு எதிராக #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை தமிழகத்தில் உள்ள பாஜக- மோடி எதிர்ப்பாளர்கள் துவங்கி வைத்து அதை உலக அளவில் டிரெண்டிங் ஆக்கினார்கள். அதனைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை துவக்க விழாவுக்கு வந்த போது அதே ஹேஷ்டேக் மீண்டும் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. நேற்று திருப்பூர் வந்த போதும் உலக அளவில் டிரெண்டிங் ஆனது. முதலில் இதை துவங்கி வைத்தது இதில் ட்விட்டுகிறவர்கள் யார் என்பதை பார்த்து விடுவோம்.
#Gobackmodi என்ற ஷேஷ்டேக்கை முற்போக்காளர்கள், தேர்தல் பாதையிலிருந்து விலகி நடக்கும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களே முதலில் துவங்கி வைத்தார்கள். இது தமிழகத்தில் துவங்கப்பட்டபோது பெரிதும் கவனிக்கப்படவில்லை. ஆனால் டிரெண்டிங் ஆன பின்னர் பலரும் இதை வைத்து ட்விட் செய்ய துவங்கினார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விழாவுக்கு மோடி வந்த போது இதே எதிர்ப்பாளர்களோடு காங்கிரஸ் ஆதரவாளர்களும், குறிப்பாக வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் ட்விட் செய்து டிரெண்டிங் செய்தார்கள். அதே நேரம் மோடியை வரவேற்கும் விதமாக வெல்கம் மோடி என்ற ஷேஷ்டேக்கில் மகாராஷ்டிரவைச் சேர்ந்தவர்களே அதிகம் பயன்படுத்தி டிரெண்டிங் செய்தனர்.
இம்முறை தமிழகத்தவர்கள் டிரெண்டிங் செய்ய கடந்த இரு நாட்களாக #Gobackmodi முதலிடத்தில் இருந்தது. இந்த டிரெண்டிங் ஒரு இயக்கம் போல நடத்தப்படுகிறது. மோடி வருவதற்கு முன்பே துவங்கப்பட்டு. வந்து அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது உலக அளவில் டிரெண்டிங் ஆகி விடுகிறது.
ஏன் இந்த அளவு மீண்டும் மீண்டும் மோடி எதிர்ப்பு டிரெண்டிங் ஆகிறது என்றால். அதை ஏதோ பொழுது போக்கு இணைய வெளியில் புழங்கும் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று இந்த எதிர்ப்பை புறந்தள்ளி விட முடியாது. ஒவ்வொரு கட்சியும் ஐ.டி விங் வைத்திருக்கிறது. கூலிக்கு ஆள் வைத்து பாஜக தனது ஆதரவு கருத்துக்களை டிரெண்டிங் செய்து வரும் நிலையில், #Gobackmodi நிச்சயம் ஊதியத்திற்காகவோ, கூலிக்காகவோ செய்த எதிர்ப்பு அல்ல. பாஜகவின் ஐ.டி விங் பலவீனமடைந்து வருகிறதா? அல்லது மோடி எதிர்ப்பு என்ற அரசியலின் ஒரு வடிவமாக இணைய வெளி உருவாகி நிற்கிறதா என்ற கேள்விகளை நாம் எழுப்பியாக வேண்டும்.
மிக முக்கியமாக இணைய வெளியில் உருவாகும் மோடி எதிர்ப்பின் பின்னால் சமூக உளவியல் ஒன்று உள்ளது. அது இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களை பாஜக கட்டுப்படுத்துகிறது. தமிழகத்திலும் இதே நிலைதான். சன் நியூஸ் தொலைக்காட்சி பிரதமர் மோடியின் வருகையை பதிவு செய்யும் அதே நேரம் மோடியை விமர்சிக்கும் செய்திகளுக்கும் முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால், பெரும்பலான ஊடகங்கள் மோடியின் பிரச்சாரகர்களாக மாறிவிட்டனர் என்பது பொதுவில் உள்ள அதிருப்தி. இந்த அதிருப்தியே இணைய வெளியில் புழங்குகிறவர்களின் மோடி எதிர்ப்பு வடிகலாக உள்ளது.
மோடியின் சிந்தனைகளை, மோடி அரசின் பிரச்சாரக்கருவி போல ஊடகங்கள் செயல்படும் நிலையில் இணைய வெளி மக்கள் மன நிலையை பிரதிபலித்து நிற்கிறது.பல லட்சம் பேர் ட்விட் செய்து #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டிங் செய்கிறார்கள் என்றால் மோடி ஆதரவு ஊடகங்களை தமிழக மக்கள் சட்டை செய்யவில்லை என்பதோடு, இந்த ஊடகங்களால் மன தளவில் எந்த மாற்றங்களையும் உருவாக்க வில்லை என்றும் கருத வேண்டியிருக்கிறது.
#Gobackmodi #மோடி #தமிழக_ஊடகங்கள்

#Cellphone_Sivakumar மீண்டும் செல்போனை தாக்கிய நடிகர் சிவக்குமார்- VIDEO!

ஸ்டாலின் மருமகனைக் குறிவைக்கும் மோடி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*