அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள்?

தேமுதிகவின் வலிமை விஜயகாந்தின் சுகவீனம்தான்!

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த கும்பல்!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாட்டாளிமக்கள் கட்சி இணைந்துள்ளது. பாமக 7 தொகுதிகளிலும்,  பாஜக 5 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக அழுத்தம் கொடுத்தது. பாட்டாளி மக்கள் கட்சியை விட அதிக தொகுதிகளை எதிர்பார்த்த தேமுதிக எட்டு தொகுதிகளைக் கேட்டது. பாஜகவும் தேமுதிக கேட்கும் தொகுதிகளை கொடுக்குமாறும். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்தும் இருக்க வேண்டும். அதற்குள் உங்கள் தொகுதி  பேரத்தை முடிவு செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.

ஆனல், சுகவீனமான விஜயகாந்தை வைத்து அவரது மனைவி பிரேமலதாவும், சுதீஷும் பேரம் பேசி வந்த நிலையில், கேளம்பாக்கத்தில் நடைபெறும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் தேமுதிகவின் விளம்பர பலகைகளும் இடம் பெற்றுள்ளது. மோடியை வரவேற்று வைத்துள்ள  இந்த விளம்பர பலகைகள் தேமுதிக தலைமையின் தலைமைக்கு தெரியாமல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், பாஜகவின் அழுத்தம் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வைத்து தேமுதிக-அதிமுக  பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அநேகமாக தேமுதிகவுக்கு அதிக பட்சமாக ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.அதிமுக 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்து 20 தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது.

#Admk_Bjp  #பாஜக_மோடி #அதிமுக_பாஜக_கூட்டணி

இந்துக்களை இழிவு செய்த அமைச்சர் மீது பாக் பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*