அத்வானியின் தொகுதியையும் எடுத்துக் கொண்ட அமித்ஷா!

பாமகவில் பிளவு – செல்வாக்கு மிக்க பெருந்தலைகள் திமுகவில் இணைந்தனர்!

இதுவரை பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி போட்டியிட்டு வந்த குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் இம்முறை பாஜக தலைவர் அமித்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் முதல்வராக இருந்த  மோடி  அத்வானியின் ரத யாத்திரையின் மேனேஜராக  பணியாற்றினார். பின்னர் படிப்படியாக தேசிய அளவில் தன்னை வளர்த்துக் கொண்ட அத்வானி அமித்ஷாவையும் துணை வைத்துக் கொண்டு பாஜகவைக் கைப்பாற்றினார். அத்வானி, முரளி மனோகர்  ஜோஷி, போன்ற மூத்ததலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.  இதில் ஓரம் கட்டப்பட்ட யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்து விலகி மோடிக்கு எதிராக திவீரமாக பேசி வருகிறார்.

மோடி பிரதமரான பின்னர்  அத்வானி டம்மியாக்கப்பட்டார்.  இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அத்வானிக்கு போட்டியிடும் வாய்ப்பே வழங்கப்படவில்லை. காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் ஆசையில் இருந்த அத்வானிக்கு மோடி ஏமாற்றத்தை பரிசளித்துள்ளார். அவருக்கு பதிலாக அமித்ஷா காந்திநகரில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. இது அத்வானி ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அதிருப்தி எதுவும் பொதுவெளியில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

#நாடாளுமன்ற_தேர்தல்  #அத்வானி #பாஜக_மோடி #அமித்ஷா_அத்வானி

தினகரன் எரிப்பு வழக்கு -பாளை சிறையில் உள்ள அட்டாக் பாண்டிக்கு ஆயுள்!

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*