இணையவந்த தேமுதிக –திருப்பி அனுப்பிய திமுக!

ரஃபேல் ஆவணங்கள் திருடு போயுள்ளன – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள்?

கடைசி நேரத்தில் சீட் கேட்டுச் சென்ற தேமுதிக நிர்வாகிகளை திமுக தலைவர்களுள் ஒருவரான துரைமுருகன் திருப்பி அனுப்பிய நிகழ்வு தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக-பாமக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் தேமுதிகவையும் இணைக்க வேண்டும் என தொடர்ந்து பாஜக  அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. பாமகவை விட கூடுதல் தொகுதி வேண்டும் என்று அடம் பிடித்த தேமுதிக நிர்வாகிகள் அதிமுகவுடன் தொடர்ந்து பேசி வந்தார்கள். மேலும் , இன்று சென்னை  வந்த பாஜக தலைவர் பியூஷ் கோயலுடன்  ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து தேமுதிக சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.  இன்னொரு பக்கம் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அனகை முருகேசன் தலைமையில்  ஒரு குழுவினரை திமுக தலைவர் துரைமுருகன் வீட்டிற்கு அனுப்பி துரைமுருகன் மூலமாக திமுக கூட்டணிக்கு  தூது விட்டார். தேமுதிக பிரமுகரும் விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் துரைமுருகனுக்கு தொலைபேசி உங்களை சந்திக்க எங்கள் பிரமுகர்கள் வருவார்கள் என்று சொல்லியிருக்க்கிறார்.

துரைமுருகனைச் சந்தித்த தேமுதிக பிரமுகர்கள் “அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். அதிமுக கூட்டணியில் இணைய பிடிக்கவில்லை அதனால் திமுக பக்கம் வருகிறோம். எதேனும் தொகுதிகளை பார்த்து ஒதுக்கிக் கொடுங்கள்  ஐந்து தொகுதிகள் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார். அவரோ “எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடித்து விட்டோம். எனவே, தலைவரிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்” என்றிருக்கிறார். விருதுநகர் மாநாட்டிற்குச் சென்றிருக்கும் ஸ்டாலினை துரைமுருகன் தொடர்பு கொள்ள. அவர்  தூங்கிக் கொண்டிருபப்தாக கூறவும்.  “தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிச் சொல்லும் அளவுக்கு முக்கியமான செய்தி இல்லை” என்று  தொலைபேசியை துண்டித்த துரைமுருகன். தேமுதிகவினரை “சீட் இல்லை. வேண்டுமென்றால் காத்திருங்கள் தலைவர் வரட்டும் பேசி விட்டுச் சொல்கிறோம்” என்றிருக்கிறார்.

#பாஜக_தேமுதிக #திமுக_நோஸ்கட் #திமுக_தேமுதிக

தேமுதிகவின் வலிமை விஜயகாந்தின் சுகவீனம்தான்!

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த கும்பல்!

இந்துக்களை இழிவு செய்த அமைச்சர் மீது பாக் பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*