இந்துக்களை இழிவு செய்த அமைச்சர் மீது பாக் பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை!

அதிமுகவில் இழுபறி – தொகுதி பங்கீட்டை முடித்த திமுக!

பாகிஸ்தான் மீது தாக்குதல் தேர்தல் பரப்புரையை திவீரமாக்கிய மோடி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் கலாச்சார அமைச்சரும் ஆளும் பிடிஐ கட்சியைச் சேர்ந்தவருமான ஃபயாஸூல் ஹசன் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்த இம்ரான்கான் தன் கட்சி நடவடிக்கையாக அவரை பதவி விலக கோரியிருக்கிறார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் உருவானதோடு இரு நாட்டி அரசியல் களத்திலும் பரபரப்பு உருவானது. இந்நிலையில், இம்ரான்கான் கட்சியை சேர்ந்த மகாண அமைச்சர் ஃபயாசுல் ஹசன் இந்துக்களை குறிவைத்து படு மோசமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்:-
“ பசுவின் சிறுநீரை குடிப்பவர்கள் இந்துக்கள் என்று கிண்டல் அடித்திருந்தார். “நாங்கள் முஸ்லீம்கல் எங்களுக்கு என்று ஒரு கொடி உள்ளது. மவுலா அலியாவின் தீரத்தின் கொடி. ஹஸ்ரத் உமராவின் வீரக்கொடி. உங்களிடம் இது போன்ற கொடி உள்ளதா? எங்களை விட நீங்கள் சிறந்தவர்கள் என்ற எண்ணம் வேண்டாம். எங்களிடம் உள்ள எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் சிலைகளை வணங்குகிறவர்கள்” என்று பாஞ்சாப் மாகாண அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சைகளை பாகிஸ்தானுக்குள் உருவாக்கியது.
இது இம்ரான்கானின் தெஹ்ரீக் இன்சாப் கட்சி தலைவர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பல தலைவர்களும் அமைச்சருக்கு எதிராக கண்டனக்கருத்துக்களை பதிவு செய்த பின்னர் “ நான் இந்திய பிரதமர் மோடியையும் இந்திய ராணுவத்தையும்தான் விமர்சித்தேன். இந்துக்களை அல்ல, இந்து சமூகத்தினரை அமைச்சரின் பேச்சு புண்படுத்தியிருந்தால் நான் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் கருத்து பாகிஸ்தான் வாழ் இந்து மக்களுக்கு எதிரானது அல்ல” என்று மன்னிப்புக் கேட்டார். அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த இம்ரான் கான் கட்சி இதனை முட்டாள்தனமானது, ஏற்க முடியாது என்று கண்டித்து அந்த அமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மொகமது ஃபைசல் தன் ட்விட்டர் பக்கத்தில்,
“ பாகிஸ்தான் தேசியக் கொடியில் உள்ள வெள்ளை நிறம் இந்து மக்கள் இந்த தேசத்திற்காக ஆற்றிய பங்களிப்பிற்காக அவர்களை மரியாதை செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. நமது கொடியின் வெள்ளை நிறமும் முக்கியம்” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

#imrankahan #இம்ரான்கான் #pakistan_pm,

ஹிரோ போல நடிப்பதை நிறுத்துங்கள் – மோடி மீது நடிகர் சித்தார்த் விமர்சனம்!

தேர்தலுக்கு முன்னர்  எழுவர் விடுதலை?

முகிலன் சமாதி என்று முகநூலில் தெரிவித்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

மோடிக்கு வெட்கமாக இல்லையா? – ராகுல் காட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*