இபிஎஸ் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் – ராமதாஸ் சர்ட்டிபிகேட்!

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆற்காடு, மற்றும் வாலஜா பேட்டை பகுதியில் திவீர பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ராமதாஸ் “ தலை நிமிர்ந்து செல்கிறவர்கள் அதிமுக கூட்டணியில் உள்ளோம். தலைகுனிந்து செல்கிறவர்கள் திமுக கூட்டணியில் உள்ளார்கள். எங்களின் கூட்டணி தெளிந்த நீரோடை. தி.மு.க தலைமையிலான கூட்டணி, தேங்கிக் கிடக்கும் குட்டை நீரைப் போன்றது. எங்கள் தேர்தல் அறிக்கையை கடந்த தேர்தலில் 60 % காப்பியடித்த திமுக இந்த முறை 90% காப்பியடித்து விட்டது. விவசாயிகள் கடன் தள்ளுபடி நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார். ஏழையாக பிறந்து ஏழையாக மறைந்தார் அண்ணா. ஆனால், திமுகவின் இப்பொதுள்ள தலைவர்கள் ஏழைகளை ஒழித்து விடுவார்கள். அதிமுக ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளார்கள்.” ஏ.கே மூர்த்தியை வெற்றி பெறச் செய்தால் அரக்கோணம் வளர்ச்சி பெறும்.
பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கிலும், பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்திலும் அதிமுக அரசு நாறிக் கொண்டிருக்கும் நிலையில் டாக்டர் ராமதாஸின் இந்த சான்றிதழ் எடப்பாடியின் ஆட்சியில் மகுடமாக சூட்டப்பட்டுள்ளது.
#டாக்டர்_ராமதாஸ் #அதிமுக_பாமக_கூட்டணி #ராமதாஸ்_பாஜக_கூட்டணி #பொள்ளாச்சி_பாலியல்கொடூரம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*