பிரதான கட்சிகளுடன் மோதும் திமுக!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளுடன் திமுக நேரடி போட்டியில் களமிரங்கியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தாமக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்டுகள், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், ஐ.ஜே.கே போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக எட்டு தொகுதிகளில் மோதுகின்றன.
1. தென் சென்னை 2.காஞ்சிபுரம், 3. திருவண்ணாமலை, 4.சேலம், 5. நீலகிரி, 6. பொள்ளாச்சி, 7. மயிலாடுதுறை, 8. நெல்லை என எட்டு தொகுதிகளில் திமுக அதிமுக நேரடியாக மோத இருக்கிறது.
அது போல வடமாவட்டங்களில் செல்வாக்குள்ள கட்சி என நம்பப்படும் பாட்டாளி மக்கள் கட்சியோடு ஐந்து தொகுதிகளில் திமுக நேரடியாக மோத இருக்கிறது. மத்திய சென்னை, 2.ஸ்ரீபெரும்புதூர், 3.தருமபுரி, 4.கடலூர், 5. அரக்கோணம்
அதே போன்ற தேமுதிக போட்டியிடும் வடசென்னை, கள்ளக்குறிச்சி தொகுதிகளிலும் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் கனிமொழி களமிரங்கும் தூத்துக்குடி தொகுதியில் மட்டும்தான் பலவீனமான பாஜக போட்டியிடுகிறது.
அதே போன்று புதிய நீதிக்கட்சி போட்டியிடும் வேலூர் தொகுதி, புதிய தமிழகம் போட்டியிடும் தென்காசி தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தஞ்சை தொகுதியிலும் திமுக போட்டியிருகிறது.

#2019_elaction #Dmk_parliment_elaction #2019_parliment_elaction #2019_elaction

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*