எடப்பாடியின் காவலாளிதான் மோடி- ஸ்டாலின் மாஸ்!

ராதாரவி சஸ்பெண்ட் உண்மை பின்னணி என்ன?

மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி -பின்னணி தகவல்கள்!

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ஜெயக்குமாரையும், பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு வாக்குக் கேட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.
”திருவாரூரில் துவங்கி இன்று திருவள்ளூரில் வந்து நிற்கிறேன். நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு ஆதரவு பெருகிச் செல்கிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். மதச்சார்பற்ற கூட்டணி வெல்லப் போகிறது என்பதை இந்த எழுச்சி எடுத்துக் காட்டுகிறது.
மோடி தன்னை சவுகிதார் என அழைத்துக் கொள்கிறார். சவுகிதார் என்றால் வாட்ச்மேன் காவலாளி என்று பொருள். மோடி இந்த நாட்டின் கவலாளி கிடையாது. அவர் எடப்பாடியின் காவலாளி என்றுதான் கூற வேண்டும். வங்கிகளில் கொள்ளையடித்துச் விட்டு தப்பிச் சென்றவர்களின் காவலாளியாக மோடி இருக்கிறார். கலைஞர் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரால் தமிழகத்திற்கு நிறைய திட்டங்கள் வந்தது. ஆனால், மோடியின் தயவில் இருக்கும் எடப்பாடியால் எந்த நன்மையாவது தமிழகத்திற்கு செய்ய முடிந்ததா? நீட் தேர்வை ரத்து செய்ய முடிந்ததா?” எனக்கேள்வி எழுப்பினார்.

#சவுகிதார், நாடாளுமன்றதேர்தல், 2019 நாடாளுமன்றதேர்தல்

விஜயகாந்தை வைத்து கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றினாரா பிரேமலதா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*