கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம்!

நெருப்பாற்றில் நீந்தும் தினகரன் -முடக்கிப் போட பாஜக அதிமுக சதி!

பாமகவிடம் தன் கட்சியையும் வாக்கையும் இழக்கப் போகும் தேமுதிக!

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் கோவா மாநில முதல்வருமான மனோகர் பாரிக்கர் உடல் நலம் குன்றி மரணமடைந்தார். கணைய நோயால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் கடந்த சில ஆண்டுகளாக கணைய புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நீண்ட காலம் இருந்த அவர் அவ்வப்போது கோவா முதல்வர் அலுவலகத்திற்கும் வந்து சென்றார்.
40 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை விட குறைவான எண்ணிக்கை கொண்ட பாஜக கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து ஆட்சியமைத்தது. அங்குள்ள ஆளுநரும் பாஜகவுக்கு வாய்ப்புக் கொடுத்தார். இப்போது மனோகர் பாரிக்கரின் மரணம் பாஜக அரசை மைனாரிட்டி அரசாக மாற்றியுள்ளது.

கோவாமுதல்வர் #மனோகர்பாரிக்கர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*