கோவை சரளாவை வைத்து நேர்காணல் – கமல் கட்சியினர் அதிர்ச்சி!

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் கமல்ஹாசன் நாடாளுமன்றத்தின் 40 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். 24-ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்வும் நடைபெற்று வரும் நிலையில் நாகை தொகுதி சார்பில் குமரவேல் போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியானது. இதில் கமல் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசனும் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தேர்தலைச் சந்திக்கும் முன்னரே அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள தகவல்கள் கொஞ்சம் காமெடியானது. பொதுவாக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது மூத்த நிர்வாகிகள் நேர்காணல் செய்வார்கள். அல்லது நேர்காணல் செய்யாமலேயே வேட்பாளர்களை அறிவிப்பார்கள். ஆனால் சினிமாவில் வித்தியாசங்களை செய்யும் கமல் அரசியலிலும் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடித்தார். கார்டூனிஸ்ட் மதம், முன்னாள் பத்திரிகை ஆசிரியர் ராவ்,சில என்.ஜி.ஓ நிர்வாகிகளை வைத்து வேட்பாளர்களை நிற்க வைத்து கேள்விகளை கேட்டு வந்தார்கள். வழக்கமாக பத்திரிகை பணிகளுக்கு உரிய நிருபர்களிடம் கேட்கும் கேள்விகளை மதனும் ராவும் கேட்டு வேட்பாளர்களை திணறடித்ததாக கூறப்படுகிறது. உச்சக்கட்டமாக நடிகை கோவை சரளாவை வைத்தும் நேர்காணல் செய்திருக்கிறார்கள். நடிகை ராதா, அம்பிகா போன்றோரை வைத்தும் வேட்பாளர்களை கேள்வி கேட்க கமல் திட்டம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது பிடிக்காத நிர்வாகிகள் ஆளை விட்டால் போதும் என ஓட்டம் பிடிக்கிறார்கள்.

#மக்கள்_நீதி_மய்யம் #கமல்ஹாசன் #நாடாளுமன்றதேர்தலில்_கமல் #இடைத்தேர்தல்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*