சக்திக்கு மீறி தொகுதிகளை வாங்கி சொதப்பும் காங்கிரஸ்- திமுகவுக்கு தலைவலி!

இபிஎஸ் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் – ராமதாஸ் சர்ட்டிபிகேட்!

அண்ணன் சீமானுக்கே லேப் டெஸ்ட் – தெலுங்கு வாரிசு அரசியல்!

திருப்பரங்குன்றம் பித்தலாட்டங்கள் விரிவான ரிப்போர்ட்!

நாடாளுமன்ற தேர்தலில்  தமிழகம், புதுச்சேரியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் திணறி வருகிறது.

கடந்த காலங்களில் கலைஞர் உயிரோடு இருந்தவரை தன் சக்தியை மீறி தொகுதிகளை வாங்கி கண்ட மேனிக்கு வேட்பாளர்களை நிறுத்தி பெரும்பாலான தொகுதிகளில் தோற்கும் காங்கிரஸ் கட்சியால் திமுகவுக்கும் பெரிய பயன் இல்லை. என்றாலும், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறது.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் “ராகுலை பிரதமராக்குவோம்” என்ற கோஷத்தை முதன் முதலாக முன் வைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். என்றாலும் கடந்த காலங்களில் கலைஞர் அள்ளிக்கொடுத்தது போல இந்த முறை தொகுதிகளைக் கொடுத்து விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். ஆனாலும், 15 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் அடம் பிடித்தது. திமுகவோ வெல்லும் தொகுதிகளைக் கேட்டுவாங்கிக் கொள்ளுங்கள். அதில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். எண்ணிக்கைக்காக தொகுதிகளைக் கேட்காதீர்கள் என்று சொன்னார். 7 முதல் எட்டு தொகுதிகள் வரை கங்கிரஸ் கட்சிக்கு போதுமானது என்று சொல்லி நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 10 தொகுதிகள் என்று பைனல் ஆனது.

ஆனால், 10 தொகுதிகளே காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் என்று திமுக தலைமை கருதிய போதும் விட்டுக் கொடுத்தது. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் தேனி தொகுதியில் சம்பந்தமே இல்லாமல் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் எப்படி தேனி தொகுதியில் வெல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதால் தினகரன் அணியினரும், அதிமுகவினரும் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.

அது போல, சிவகங்கை தொகுதிக்கு யார் வேட்பாள்ர் என்றே இன்னும் அறிவிக்கவில்லை. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமா? அல்லது சுதர்சன நாச்சியப்பனா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த குழப்பங்களுக்கு மத்தியில்,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமாரை வேட்பாளர் ஆக்கியிருக்கிறது காங்கிரஸ். இப்போது 18 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த 18 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டுதான் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியும்.தற்போதைய திமுக கூட்டணி உறுப்பினர்கள்  எண்ணிக்கை 97. இதில் வசந்தகுமார் ராஜிநாமா  செய்தால் திமுக கூட்டணி பலம் ஒன்று குறைந்து விடும். வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் வெல்லும் சூழலில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அப்படிச் செய்வது திமுகவுக்கு பலவீனமான செயலாகும்.

தன் சக்தியை மீறி தொகுதிகளைக் கேட்டு வாங்குவது. பின்னர் அதில் வெற்றி பெற முடியாத வேட்பாளர்களை நிறுத்துவது. சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்ற வேட்பாளர்கள் ஆக்குவது என, காங்கிரஸ் கட்சியால் திமுக சந்திக்கும் இடர்பாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

#காங்கிரஸ்_திமுக_கூட்டணி #நாடாளுமன்றதேர்தல் #2019_தேர்தல்

பாஜகவில் அனைத்து காவலாளிகளும் திருடர்கள்தான் – ராகுல்காந்தி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*