சீன் காட்டுகிறார் மோடி – விருதுநகரில் மிரட்டிய ஸ்டாலின்

மோடி பேசிக் கொண்டிருந்த போது காலியாகக் கிடந்த சேர்கள்! VIDEO

இணையவந்த தேமுதிக –திருப்பி அனுப்பிய திமுக
சென்னையில் அதிமுக, பாமக, அதிமுக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் சென்னை கேளம்பாக்கத்தில் நடந்து முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் விருது நகரில் திமுகவின் தென் மண்டல மாநாடு துவங்கியது. தனியொரு மனிதனாக ஸ்டாலின் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்:-
“ தமிழகத்தின் அவல நிலைக்கும், அராஜக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கம்தான் இந்த மாபெரும் விருதுநகர் மாநாடு. தமிழக அரசியலில் இரு முதல்வர்களைத் தந்த மாவட்டம் விருது நகர். விடுதலை வீரர்கள் சின்ன மருதுவும், பெரிய மருதுவும் பிறந்தது இங்குதான். அவர்கள் பிறந்தது முக்குலம் ஊரில்தான். 2004 லோக்சபா தேர்தலுக்கு முன்னர் இங்கு மாநாடு நடத்தினோம். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களையும் வென்றது. இப்போது வரலாறு திரும்புகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் வருகிறது. மீண்டும் நாம் 40 -க்கு 40 தொகுதிகளையும் வெல்வோம். நாம் விரும்பும் நாம் சொல்லும் நபர்தான் மீண்டும் பிரதமராக வருவார். ராகுல்காந்திதான் வருவார். இதை நான் பெருமையோடு சொல்கிறேன்.
கொலைகார எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். பாசிச பாஜக ஆட்சிக்கு நாம் முடிவு கட்ட வேண்டும். அதை இந்த தேர்தலில் நாங்கள் செய்வோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும். தமிழ்நாட்டிற்கு வந்து மக்களை கவனிப்பது போல மோடி சீன் காட்டுகிறார். மோடி நன்றாக நடிக்கிறார். மோடி இனி அடிக்கடி வந்து இப்படித்தான் நடிப்பார். பேசுவார். 130 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடி சீன் காட்டுகிறார். பணமதிப்பிழப்பு, மூலம் மக்களைக் கொண்டு வந்தவர் மோடி” என்று மிக கடுமையாக மோடியை விமர்சித்து பேசினார் ஸ்டாலின்.

#ஸ்டாலின் #திமுக_தென்மண்டல_மாநாடு

ரஃபேல் ஆவணங்கள் திருடு போயுள்ளன – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*