சுங்கவரி ரத்து-நீட் தேர்வு ரத்து -திமுக தேர்தல் அறிக்கை!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவின் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்
மத்திய அரசு அலுவலகங்கள் தமிழ் இணை மொழியாக இருக்கும்
தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு
தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள் பத்தாயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்படும்
நீட் தேர்வு ரத்து செயப்படும்
கச்சத்தீவு மீட்கப்படும்
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை
சுங்கவரி ரத்து செய்யப்படும்
கடலோர மக்களுக்கான புதிய சட்டம்
கார்ப்பரேட் நிறுவனங்கள் சமுதாய பொறுப்புத் திட்டத்தின் கீழ் பத்தாயிரம் ஊதியத்தில் வேலை
சுற்றுச் சூழலை பாதிக்கும் திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும்
சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும்
எழுவர் விடுதலைக்கு வலியுறுத்துவோம்
என்பது உள்ளிட்ட சிறப்பம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது.

#திமுக_தேர்தல்_அறிக்கை #2019_நாடாளுமன்றதேர்தல் #ஸ்டாலின்_கருணாநிதி

திமுக வேட்பாளர் பட்டியல் -பிரபலங்கள் புதியவர்களுக்கு வாய்ப்பு!

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*