பேச முடியாமல் போன விஜயகாந்த்-பேரத்தை முடித்த பிரேமலதா!

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் ஒரு மாத இடைவெளி?

பாகிஸ்தானை புகழ்வதை நிறுத்துங்கள் -மோடி

தேமுதிக என்னும் கட்சியை துவங்கிய நடிகர் விஜயகாந்துக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட சுயநினைவில்லை. ஆனால், அவரை வைத்து மிகப்பெரிய பேரங்களை நடத்தி முடித்திருக்கிறார்கள் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், அவரது தம்பி சுதீஷும்.
ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்குள் வந்த விஜயகாந்த் தனித்து நின்று பிரமிக்கத்தக்க அளவுக்கு வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டினார். 2011 சட்டமன்ற தேர்தலில் 11% வாக்கு வங்கியை தேமுதிக கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தன் வாக்கு வங்கியை படிப்படியாக இழந்து வெறும் 2% சதவிகித வாக்குவங்கியையே தேமுதிக கடைசியாக கொண்டிருந்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே உடல் நலம் குன்றியிருந்த விஜயகாந்த் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்று விட்டு சமீபத்தில்தான் அவரை சென்னைக்கு அழைத்து வந்தார்கள். ஆனால், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை என்கிறார்கள் தேமுதிகவினர். தேமுதிகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் பேசும் போது “கேப்டனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே சரியாக  தெரியாது. அவரால்  வாய் பேச முடியவில்லை.தேர்தலுக்கு முன்னர் அவரை பேச வைத்து விட வெண்டும் என எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டதால் அவரை அமரவைத்தே பேரத்தை முடித்து விட்டார்கள் பிரேமல்தாவும், சுதீஷும் ஜெயலலிதாவுக்கும் தனக்குமான மோதலால்தான் கலைஞர் மரணத்தின் போது கதறியழுதார் விஜயகாந்த். ஆனால், விஜயகாந்தை வைத்து பிரேமலதாவும், சுதீசும் திமுக, அதிமுகவுடன் பேரங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். 8 தொகுதிகளும், கேப்டன் டிவிக்கு பெருந்தொகை நன்கொடையும் வேண்டும் என்பதுதான் பிரேமலதா, சுதீஷின் கோரிக்கையாக இருந்தது. திமுக ஆரம்பம் முதலே நான்கு தொகுதிகளும் செலவுக்கு பணமும் தருகிறோம் என்று பேசினார்கள். ஆனால், பிரேமலதா ரகசியமாக அதிமுகவுடன் பேசி வந்தார்” என்கிறார்.
இந்த பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் பாஜக இருக்கும் கூட்டணியில் நாமும் இருப்போம் என்பதுதான் பிரேமலதாவின் விருப்பமாக இருந்தது. அதனால் பேச்சுவார்த்தையை இழுத்த நிலையில் பாமக தன் பலத்திற்கு மேலாக 7 தொகுதிகளை வாங்கிச் செல்ல தேமுதிக 8 தொகுதிகளைக் கேட்டது. கடைசி நேரம் வரை திமுகவிடம் பேச அது ஊடகங்கள் மூலம் வெளியாகி தேமுதிக இமேஜ் பலத்த அடிவாங்கியது.
இப்போது திமுக பேசிய நான்கு தொகுதிகளையும் அதிமுகவிடம் பெற்றுக் கொண்ட தேமுதிக மிகப்பெரிய தொகை ஒன்றை பெற்றிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஆனால், இது எதுவுமே விஜயகாந்திற்கு தெரியாது. ஆனால், விஜயகாந்த் என்ற முகத்தை வைத்துதான் பேரங்களை பிரேமலதாவும், விஜயகாந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடப்பது எதுவும் புரியாமல் கண்களில் வழியும் தண்ணீரை துடைத்துக் கொண்டே இருக்கிறாராம் விஜயகாந்த்.

#vijayakanth #Dmdk #premalatha

“மோடிதான் எங்கள் டாடி” லேடியை கைவிட்ட ராஜேந்திரபாலாஜி!

தருமபுரியில் சவுமியா அன்புமணி- பின்னணி தகவல்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*