சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கை!

அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்!

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ வாக இருப்பவர் கனகராஜ். 64 வயதாகும் கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டவர். அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ்-சசிகலா அணி என பிரிந்த போது சசிகலா அணியில் இருந்து இபிஎஸ் அணிக்கு தாவியவர். இன்று காலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தவருக்கு தீடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
கனகராஜ் மரணத்தையடுத்து தமிழகத்தில் மொத்தம் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. இப்போது 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் எஞ்சியுள்ள நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கும் சூழல் எழுந்துள்ளது.கனகராஜ் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

#அதிமுக_எம்_எல்_ஏ_மரணம் #கனகராஜ்_மரணம் #மினிசட்டமன்றதேர்தல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*