’ஜெ’ கைரேகை போலியானது- அம்பலமானது எப்படி?

அத்வானியின் தொகுதியையும் எடுத்துக் கொண்ட அமித்ஷா!

பாமகவில் பிளவு – செல்வாக்கு மிக்க பெருந்தலைகள் திமுகவில் இணைந்தனர்!

திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஜெயலலிதா கைரேகை  வழக்கு என்றுதான் இந்த வழக்கை நீதித்துறையில் அழைத்து வந்தார்கள். 2016 நவம்பர்  மாதம் திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் நடந்தது. இந்த மூன்று இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்களிலும் இடம் பெற்றிருந்த  ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்று  அப்போதே சர்ச்சைகள் உருவானது.

அதிமுக வேட்பாளர் தனது வேட்புமனுவின் ஏ.பி படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பெற்றதில் முறைகேடுகள் இருப்பதால் போஸின் வேட்புமனுவே செல்லாது  எனவே அவரது  வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வ்ழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனுவில் உள்ள ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி தாமாக முன்வந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு சம்மன் அனுப்பினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற  ஜெயலலிதாவின் கைரேகை பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சரவணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் வைத்தியலிங்கம். “ படிவம் ஏ, பி ஆகியவற்றின் அடிப்படையில்தான் அரசியல் கட்சிகளுக்குச் சின்னம் வழங்கப்படும். இந்தப் படிவங்களில் கையெழுத்துதான் போட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெளிவாக கூறியுள்ளது. 1968க்குப் பின்னர் இதுவரை அந்த உத்தரவு மாற்றப்படவில்லை. அவ்வாறு மாற்ற வேண்டுமென்றால் மூன்று தேர்தல் ஆணையர்களும் சேர்ந்து முடிவு செய்து அரசிதழில் வெளியிட வேண்டும். இது எதையும் செய்யாமல், ஒரு குறிப்பை மட்டும் அனுப்பி அதில் கையெழுத்து வாங்கியுள்ளனர். சட்டப்படி இது தவறு” எனக் குறிப்பிட்டார்.

“ஜெயலலிதாவின் கைரேகையை பொறுத்தவரையில் அவர் கைரேகையை வைத்தாரா என்ற முதல் கேள்வியும், பாலாஜியின் முன் கைரேகையை வைத்தாரா என்ற இரண்டாவது கேள்வியும் ஜெயலலிதா முன்பாக பாலாஜி கையெழுத்துப் போட்டாரா என்ற மூன்றாவது கேள்வியும்  உருவானது. வேட்பாளர் விண்ணப்பத்தில் ஜெயலலிதா கைரேகை பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு

27.10. 2016 இரவு 8 மணிக்குதான் அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல 20 நிமிடங்கள் வரை ஆகியிருக்கலாம். ஆனால், 27ஆம் தேதி மாலை 6 மணிக்கே அந்த ஆணையைத் தான் கையில் வைத்திருந்ததாகவும் ஜெயலலிதா முன்பு படித்து காட்டியதாகவும் நீதிமன்றத்தில் பாலாஜி சாட்சியம் அளித்துள்ளார். இல்லாத கடிதத்தை அவர் எப்படி படித்திருக்க முடியும்” என்று வழக்கறிஞர் தரப்பில் கேள்வி வாதிடப்பட்டது.

மிக நீண்ட இந்த வழக்கு விசாரணையில் மருத்துவர் பாலாஜியும், ஆளும் அதிமுக அரசும் ஒட்டு மொத்தமாக தமிழக ஏமாற்றி வந்ததை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் உடைத்தெறிந்தார்கள். ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்பதால் திருப்பரங்குன்றத்தில் ஏ.கே. போஸ் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால், துரதிருஷ்டமாக ஏ.கே.போஸ் இறந்து விட்டார்.

ஆனால், இந்த தீர்ப்பு ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சந்தேகத்தை வலுவூட்டுகிறது. அவர் கொல்லப்பட்டார் என்று ஒரு தரப்பினர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியான வடிவம் கிடைத்துள்ளது.

 

#ஜெயலலிதா_மரணம் #திருப்பரங்குன்றம்_இடைத்தேர்தல் #ஏகே_போஸ் #jayalalitha_dead #jayalalitha_murder

தினகரன் எரிப்பு வழக்கு -பாளை சிறையில் உள்ள அட்டாக் பாண்டிக்கு ஆயுள்!

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*