தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் ஒரு மாத இடைவெளி?

பாகிஸ்தானை புகழ்வதை நிறுத்துங்கள் -மோடி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே-23-ஆம் தேதி நடைபெறும் என்பதால் மிக நீண்ட இடைவெளியோடு இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு இயந்திரங்களை ஒரு மாதத்திற்கு மேல் பாதுகாத்து வைக்கப் போவது போல கேள்விகளை எழுப்புகிறது.
நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டடது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசொக் லவசா, சுசில் சந்திரா அகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்தியா முழுக்க ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் வருகிறது. அதன் படை 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் , காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் முடிந்து மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை. சுமார் ஒரு மாத காலம் காத்திருந்து பின்னர் மே-23-ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மத்தியில் மோடி அரசும் மாநிலத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசும் உள்ள நிலையில் இந்த மிக நீண்ட இடைவெளி பொதுவெளியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

#2019_makkalavai_theerthal #2019_தேர்தல் #21_சட்டமன்றதேர்தல் #மினி_சட்டமன்றதேர்தல்

“மோடிதான் எங்கள் டாடி” லேடியை கைவிட்ட ராஜேந்திரபாலாஜி!

தருமபுரியில் சவுமியா அன்புமணி- பின்னணி தகவல்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*