தருமபுரியில் சவுமியா அன்புமணி- பின்னணி தகவல்கள்!

இன்று பெண்கள் தினம்!

பட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக தருமபுரி தொகுதியில் களமிரங்குகிறார் அன்புமணி ராமதாஸின் மனைவி. அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லி செல்ல இருக்கிறார் என்கிறது பாமக வட்டாரங்கள்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா உறுப்பினருமாக மொத்தம் எட்டு டெல்லி அங்கீகாரம் அதற்கு கிடைத்துள்ளது. பாமக வரலாற்றில் இது அதன் சக்தியை மீறிய அங்கீகாரம் என்று அதிமுகவினரே வியக்கும் நிலையில். படு குஷியாக இருக்கிறார் பாமக தலைவர் ராமதாஸ். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எலியும் பூனையுமாக மோதிக் கொண்டவர்கள் இருவரும். அவரது மரணத்திற்குப் பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் அணியினருடனும், திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசி புத்திசாலித்தனமாக திமுகவைக் காட்டி 7 தொகுதிகளை பெற்றுள்ளது பாமக.
இப்போது தருமபுரி தொகுதியின் சிட்டிங் எம்.பியாக அன்புமணி ராமதாஸ் இருக்கும் நிலையில், வரவிருக்கும் தேர்தலின் தன் மனைவியை களமிரக்க நினைக்கிறார் அன்புமணி. காரணம் தொகுதியில் எட்டுவழிச்சாலைக்கு உள்ள எதிர்ப்பும். அதில் பாமக துரோகம் செய்து விட்டது என்று பொது மக்களிடம் நிலவும் எண்ணத்தையும் உடைக்கத்தான்.

சென்னையில் பம்மல் துவங்கி காஞ்சிபுரம், திருவண்ணாமலை. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, அரூர், சேலம் வழியாக அமைக்கப்பட இருக்கும் எட்டுவழிச்சாலையில் அதிக நிலங்களை பறிகொடுக்கப் போகும் இடங்கள் ஒன்று திருவண்ணாமலை, இன்னொன்று கிருஷ்ணகிரி, அரூர். இந்த மூன்று இடங்களுமே வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் இடங்களில் இதனால்தான் வேறு பிரச்சனைகளில் திவீரம் காட்டாத பாமக எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அன்புமணி இளைஞர்களைத் திரட்டி ஊர்வலம் எல்லாம் போனார். அதிமுகவை எதிராக நிறுத்தித்தான் எட்டுவழிச்சாலைக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்தது பாமக. மக்களும் தங்கள் நிலங்களை பெருமளவு பறி கொடுப்பதால் இதை உயிராதாரமான பிரச்சனையாக கருதுகிறார்கள்.

மக்கள் அதிமுகவை நம்பவில்லை,. ஆனால், பாமகவை நம்பினார்கள். இப்போது பாமக அதிமுகவோடு கூட்டணி வைத்து விட்டதால். அதன் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இந்த திட்டத்தை ஒப்புக்கு எதிர்த்து விட்டு திரைமறைவில் விலை போய் விட்டார்களோ என்று சந்தேகிக்கிறார்கள். இந்த அதிருப்தி தருமபுரி முதல் அரூர் வரை அடர்த்தியாக வாழும் வன்னியர்களிடம் உள்ளது. இது அன்புமணி வென்ற தருமபுரி தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்கு வங்கி நிறைந்த பகுதி. மேலும் பாமக இனி வன்னியர்களிடம் மட்டும் வாக்குக் கேட்டுச் செல்ல முடியாது. தனியாகவும் வேலை செய்ய முடியாது. அனைத்து சமூகங்களிடமும் வாக்குக் கேட்டாக வேண்டிய கூட்டணிச் சூழலும் உள்ள நிலையில், இந்த அதிருப்தியையும் வன்னியர் என்ற அடையாளத்தையும் மீறி பரந்து பட்ட வாக்காளர்களிடம் செல்ல சவுமியா அன்புமணியின் முகம்தான் பயன்படும் என்று ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்களாம்.சவுமியாவுக்கு கட்சியினரிடம் நற்பெயர் உள்ளது. பெண்களிடம் ஓரளவு ஆதரவை திரட்டமுடியும். ஜாதியைக் கடந்து பரவலாகச் செல்ல சவுமியா அன்புமணியே சரியான வேட்பாளர் என் பாமக தலைமை கருதுகிறது.

ஆனால், அதிமுகவில் உள்ள வன்னியர்கள் வாக்களிக்கிறார்களோ இல்லையோ ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி. முனுசாமியோடு ராமதாஸ் நெருக்கமாக இருக்கிறார். முனுசாமியை நம்பி தருமபுரியில் களமிரங்கும் சவுமியா அனுபுமணிக்கு சரியான சவால் கொடுக்கும் வேட்பாளர் யார் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

#pmk  #sowmya_anpumani #Anpumani_Ramdas

திரைமறைவில் நள்ளிரவும் கூட்டணி பேரம் பேசியது யார்? – ஸ்டாலின்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*