தினகரன் எரிப்பு வழக்கு -பாளை சிறையில் உள்ள அட்டாக் பாண்டிக்கு ஆயுள்!

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கை!

தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினகரன் நாளிதழ் 2007-ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெரும்பான்மையாக மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். மதுரையில் இருந்த அழகிரிக்கு எதிராக அந்தக் கருத்துக்கணிப்பு இருந்ததால், மதுரையில் இருந்த தினகரன் நாளிதழ் அலுவலகத்தை அழகிரி ஆதரவாளர்கள் தீ வைத்து சூறையாடினார்கள். இதில் மூவர் பலியாகினர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் அழகிரி ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் கைதாகினர் இவர்களை சிபிஐ நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு விடுதலை செய்தது.
இந்த விடுதலைக்கு எதிராக சிபிஐ சார்பிலும், வினோத்தின் தயார் பூங்கொடியும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ்,பி.புகழேந்தி ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்கள்.
தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்டு மூவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான அட்டாக்பாண்டி, பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.இவர்கள் மீதான பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வெடி மருந்து சட்டம் உட்பட 5 பிரிவுகளுக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த தண்டனையை 9 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.
இந்த 9 பேரில் அட்டாக் பாண்டி பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். எஞ்சிய 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
குண்டு வீச்சில் கொல்லப்பட்ட கோபிநாத், முத்துராமலிங்கம், வினோத் குடும்பத்திற்கு 3 மாதங்களுக்குள் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த வழக்கில் 17-வது குற்றவாளியான டி.எஸ்.பி ராஜராமை குற்றவாளி என அறிவித்திருக்கும் நீதிமன்றம். அவருக்கான தண்டனையை மார்ச் 25-ஆம் தேதி அறிவிப்பதாக அறிவித்துள்ளது.
முன்னதாக அழகிரி ஆதரவாளராக இருந்த அட்டாக் பாண்டி தினகரன் நாளிதழை எரித்தார். பின்னர் கோஷ்டி மோதலில் அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷையும் கொலை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.பின்னர் பங்காங்கிற்கு தப்பிச் சென்று பின்னர் சரணடைந்தவர் சிறையிலேயே இருக்கிறார். இனி அவர் வெளியில் வருவது சாத்தியமே இல்லை.

#Dinakaran_case #Attak_pandi #azakiri

அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*