திமுக கூட்டணிக்கு வேல்முருகன் ஆதரவு!

ராமதாஸ் டைரி குறிப்புகளைப் புரட்டினால்?

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் வட மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்குள்ள தலைவருமான பண்ருட்டி வேல்முருகன் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.  அப்போது காடுவெட்டி குரு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பண்ருட்டி வேல்முருகன் குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக கூட்டணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி வருமா என்ற கேள்வி நிலவிய நிலையில், 7 தொகுதிகள் பேரம் பேசி அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து விட்டது. இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்த திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த வேல்முருகன் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்தார். பின்னர் ஊடகங்களிடம் பேசிய வேல்முருகன், “பாசிச பாஜக அரசையும் எடப்பாடி பழனிசாமி அரசையும் வீழ்த்த திமுக கூட்டணிக்கே ஆதரவு. மாவீரன் காடுவெட்டி குருவை கொலை செய்து விட்டதாக அவரது உறவினர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். அது போல ராமதாஸ் பல கோடி வன்னிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்”என்று பேசினார் பண்ருட்டி வேல்முருகன்.

#velmurugan #வேல்முருகன் #பண்ருட்டிவேல்முருகன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*