தேமுதிகவின் வலிமை விஜயகாந்தின் சுகவீனம்தான்?

இந்துக்களை இழிவு செய்த அமைச்சர் மீது பாக் பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை!

அதிமுகவில் இழுபறி – தொகுதி பங்கீட்டை முடித்த திமுக!

பத்து தடவைக்கு மேல் தேமுதிகவிடம் அதிமுக தொகுதி பேரத்தில் ஈடுபட்டும் இன்னும் இழுபறி நீடித்து வரும் நிலையில், பாஜகவின் டெல்லி மேலிடம் கொடுக்கும் அழுத்தங்களால் தான் அதிமுக தேமுதிகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.இதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட விஜயகாந்த் பாட்டாளி மக்கள் கட்சியை விட அதிக இடம் கொடுத்தால் மட்டுமே கூட்டணிக்குள் வருவோம் என்று பிடிவாதமாக இருக்கிறது.

பெரிய கட்சிகளைத் தேசிய சிறிய கட்சிகள் சென்று பேசுவதுதான் வாடிக்கை. ஆனால் தேமுதிகவை தேடி அதிமுக செல்கிறது. ஒரு முறை கூட அதிமுகவின் தலைமையகத்திற்கு தேமுதிக தரப்புச் செல்லவில்லை. இதையே தன் தரப்பு வலிமையாக இருப்பதாக பிரேமலதா குழுவினர் காட்ட முயல்கின்றன. உண்மையில் 2011- ஆம் ஆண்டிற்கு பிறகு தேமுதிக படு தோல்வியை சந்தித்து வருகிறது. 11% வாக்குவங்கியை வைத்திருந்த அக்கட்சி 5% -க்கும் குறைவான வாக்குவங்கியையே இப்போது கொண்டிருக்கிறது.
விஜயகாந்த் உடல் நலம் குன்றியிருப்பதால் அவரை சந்திக்கச் செல்லும் தலைவர்கள் அப்படியே கூட்டணி பற்றியும் பேசி வருகிறார்கள். இதையே தன் வலிமையாக மாற்றி விஜயகாந்தின் மனைவி பிரேமலாதாவும், சுதீஷும் அதிமுகவுடன் பேரம் பேசி வருகிறார்கள். தொகுதிகளோடு பெரும் தொகையை ஒன்றையும் கேட்பதாக தகவல்கள் கசிகின்றன.
தேமுதிக தான் பழைய பலத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் பேரம் பேசுவதும் பாஜகவோடு அதற்கிருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி அதிக தொகுதிகளையும் கேட்கும் நிலையில் பாமகவுக்கு கொடுத்த ஒரு தொகுதியை திரும்ப பெற்று தேமுதிகவுக்கு கொடுக்க அதிமுக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

#vijayakanth #dmdk #premalatha #vijayakanth #captan_vijayakanth
#பாமக_பாஜக_கூட்டணி #மோடி_ராமதாஸ் #Bjp_Modi

பாகிஸ்தான் மீது தாக்குதல் தேர்தல் பரப்புரையை திவீரமாக்கிய மோடி!

ஹிரோ போல நடிப்பதை நிறுத்துங்கள் – மோடி மீது நடிகர் சித்தார்த் விமர்சனம்!

தேர்தலுக்கு முன்னர்  எழுவர் விடுதலை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*