தேர்தலுக்கு முன்னர்  எழுவர் விடுதலை?

முகிலன் சமாதி என்று முகநூலில் தெரிவித்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

மோடிக்கு வெட்கமாக இல்லையா? – ராகுல் காட்டம்!

ராஜீவ் கொலைவழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழுபேரையும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் விடுதலை செய்ய இருப்பதாக  செய்திகள் வெளியாகி உள்ளன.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது பற்றி அமைச்சர்களுடன் பேசி முடிவெடுத்து விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் எழுவர் விடுதலை தொடர்பான அறிவிப்பு  வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

“ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக உள்ள எழுவரையும்  விடுதலை செய்வது தொடர்பான முடிவை மாநில அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி விட்ட பின்னர். மாநில அமைச்சரவை முடிவெடுத்து அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதன் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ள நிலையில்,  மார்ச்- 9-ஆம் தேதி எழுவர் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் மனித்தச்சங்கிலி போராட்டம்  அற்புதம்மாள் தலைமையில் நடைபெற  இருக்கிறது.  இந்த போராட்டம் நடக்கும் மறு நாள் மார்ச் 10-ஆம் தேதி எழுவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி,

“ சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட எழுவரும் வருகிற மார்ச் 10-ஆம் தேதிக்குள் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பத்தகுந்த தகவல் வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏழு பேரையும் விடுதலை செய்து பாஜக –அதிமுக கூட்டணி மக்கள் நம்பிக்கையை பெற தீர்மானித்திருபப்தாக தகவல்கள் வருவதாக” கூறுகிறார் புகழேந்தி.

பேறரிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமாரோ:-

“28 ஆண்டுகாலம் சிறையில் இருந்து விட்ட நிலையில்  இந்த விடுதலை தேர்தல் ஆதாயத்திற்காக கிடைத்தது என்றால் அதுவும் நன்மைக்கே அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்” என்கிறார்.

பார்க்கலாம்  தேர்தல் நலனுக்காகவேனும் எழுவரும் விடுதலையாகி விடுவார்கள் என எழுவர் தரப்பில் போராடுகிறவர்கள்  நம்புகிறார்கள் அந்த நம்பிக்கை வீண்போகாமல் இருக்கட்டும்.

#எழுவர்_விடுதலை #அற்புதம்மாள்

வந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*