நெருப்பாற்றில் நீந்தும் தினகரன் -முடக்கிப் போட பாஜக அதிமுக சதி!

பாமகவிடம் தன் கட்சியையும் வாக்கையும் இழக்கப் போகும் தேமுதிக!

பிரதான கட்சிகளுடன் மோதும் திமுக!

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை எப்படியாவது போட்டியிட விடாமல் தடுக்க அதிமுக, பாஜக சதி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவுக்குப் பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என மூன்றாக உடைந்த அதிமுகவை பாஜக தன் தேவைக்காக கட்டுக்குள் வைத்து ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகளை இணைத்தது. தினகரன் தனி அணியாக இருக்கிறார். ஆர்.கே. நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இப்போது இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்குத்தான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி விட்ட நிலையில், அந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார் தினகரன். இரட்டை இலைச் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அதுவரை குக்கர் சின்னத்தை தர வேண்டும் என்றுதான் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது தேர்தல் கமிஷனில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. வேண்டுமென்றே இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் தாமதப்படுத்தியதாக அரசியல் விமர்சகங்களும், தினகரன் அணியினரும் வெளிப்படையாக கூறிய நிலையில், அந்த வழக்கை மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
மார்ச் 26-ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள். அதற்கு முந்தைய நாள்தான் குக்கர் சின்னம் கிடைக்குமா என்பதே தினகரனுக்குத் தெரியும். இந்த நெருக்கடிகள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தமிழகம் முழுக்க உள்ள அம்மா மக்கள் முன்னெற்றக்கழகத்திற்காக தேர்தல் பணியாற்ற இருப்பவர்களை பாஜகவினரும், அதிமுகவினரும் நேரடியாகவே மிரட்டி வருவதாக தெரிகிறது. இதை எல்லாம் மீறி தினகரன் அணியினர் தாக்கல் செய்யும் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி மேலிடம் அழுத்தம் கொடுக்கிறதாம். குக்கர் சின்னத்தில் இல்லாமல் ஒவ்வொரு தொகுதியிலும் சுயேட்சையாக களமிரங்கினால் கூட அவர்களது வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளாமல் இழுத்தடியுங்கள் குறிப்பாக பாஜக அதிமுக போட்டியிடும் தொகுதிகளிலாவது தினகரன் அணியை முடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம். பாஜக அதிமுக தேர்தல் கமிஷன் நீதித்துறை என அனைத்து பக்கங்களிலும் நெருக்கடிகளைச் சந்திக்கும் தினகரன் அதையும் மீறி சில தொகுதிகளில் வென்றால் கூட அதுதான் தமிழக அரசியல் வரலாற்றின் பிரமாண்ட வெற்றியாக இருக்கும்.

#sasikala #Dinakaran #தினகரன் #அம்மா_மக்கள்_முன்னேற்றக்கழகம்

திமுக கூட்டணிக்கு வேல்முருகன் ஆதரவு!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*