பதிலடி கொடுப்போம் -மோடி தேர்தல் பிரச்சார உரை!

இராணுவ வீரர்களின் தியாகம் வீண்போகாது. உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார். பீகார் மாநிலம் பாட்னாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கெற்றார். நிதிஷ்குமார் பேசுகையில்,
“ பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியை மோடி கொடுத்து வருகிறார் என மோடியை பாராட்டினார். பின்னர் பேசிய மோடி:-
“தேசிய ஜனநாயக கூட்டணி பீகார் மக்களின் நலனுக்காக பாடுபடுகிறது. விவசாயிகளின் கணக்குகளுக்கு 75 ஆயிரம் கோடி வழங்கப்படும்.எதிர்க்கட்சிகள் இந்திய விமானப்படையின் தைரியம் தொடர்பாக கேள்வி எழுப்புகின்றன. மத்தியில் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவர்கள்தான் வளர்ச்சி அடைவார்கள். இப்போது இந்திய விமான படையின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள்.காங்கிரஸ் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் நம்முடைய படையை ஏன் ஊக்கமிழக்க செய்ய வேண்டும்? நம்முடைய எதிரிகள் பலன் அடையும் வகையில் அவர்கள் அறிக்கையை ஏன் வெளியிட வேண்டும்? இந்தியா துணிச்சலான வீரர்களின் தியாகத்தை வீணாக அனுமதிக்காது. ஒவ்வொரு தியாகத்திற்கும் ஒரு பொருத்தமான பதில் கொடுப்போம் என்பதை உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.
#ராணுவ_தாக்குதல் #Kahmir_Attak #MIRAJ_21 #PULWAMA_ATTACK #BiharRejectsModi

வந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*