பாகிஸ்தானை புகழ்வதை நிறுத்துங்கள் -மோடி

“மோடிதான் எங்கள் டாடி” லேடியை கைவிட்ட ராஜேந்திரபாலாஜி!

பாலகோட் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், 130 கோடி இந்திய மக்கள்தான் எனது ஆதாரம். பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை நிறுத்துங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி இந்திய விமானப்படைகள் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இந்திய விமானி அபி நந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டு அவர் சென்ற விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையொட்டி எதிர்க்கட்சிகளும், சமூக வலைத்தளங்களிலும் இந்த தாக்குதல் உண்மையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 350 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தாக்குதலுக்கு ஆதாரம் எதுவும் இதுவரை வெளியாக வில்லை. புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டிருந்தனர்.
இந்நிலையில், காஜியாபாத் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி” பாலகோட் தாக்குதலுக்கு 130 கோடி மக்கள்தான் ஆதாரம். பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை நிறுத்துங்கள்” என்று பேசினார் மோடி.
#புல்வாமா_தாக்குதல் #Pulwama_attack #Balcoat_Attack

தருமபுரியில் சவுமியா அன்புமணி- பின்னணி தகவல்கள்!

இன்று பெண்கள் தினம்!

திரைமறைவில் நள்ளிரவும் கூட்டணி பேரம் பேசியது யார்? – ஸ்டாலின்!

“பணத்துக்காக ராமதாஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார்” -பண்ருட்டி வேல்முருகன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*