பாகிஸ்தான் மீது தாக்குதல் தேர்தல் பரப்புரையை திவீரமாக்கிய மோடி!

ஹிரோ போல நடிப்பதை நிறுத்துங்கள் – மோடி மீது நடிகர் சித்தார்த் விமர்சனம்!

தேர்தலுக்கு முன்னர்  எழுவர் விடுதலை?

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டுமா வேண்டாமா? என்று மக்களை நோக்கி பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.கடந்த ஐந்தாண்டுகால மோடியின் ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்நாட்டு தொழில் துறையும்,பண மதிப்பும் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து நந்த ஐந்து மாநில தேர்தல்களிலும் தோல்வியைச் சந்த்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது.
தேர்தலையொட்டி இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த போர்ச்சூழலை மோடி தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்களை மோடி திறந்து வைத்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி,
“ ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருக்கும் மக்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் சிகிச்சை பெற முடியும். ஜாம் நகர் மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால் போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும். கொல்கொத்தாவில் இருந்தாலும் சரி கராச்சியில் இருந்தாலும் சரி இலவச சிகிச்சை பெற முடியும் என்றார். பாகிஸ்தான் நகரான கராச்சி என்று மோடி குறிப்பிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கூட்டத்தில் இருந்து சத்தம் வரவும், பிரதமர் மோடி,. கராச்சியை குறிப்பிடவில்லை கேரளாவில் உள்ள கொச்சியை குறிப்பிட்டேன். என்னுடைய சிந்தனை எப்போதும் அண்டை நாடு குறித்த விஷயத்தில் தான் உள்ளது. அதனால்தான் கராச்சி என்று கூறி விட்டேன். நம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நாம் திருப்பி தாக்குதல் நடத்த வேண்டுமா? வேண்டாமா?” எனக் கேட்க அங்கிருந்த மக்கள் “தாக்குதல் நடத்த வேண்டும்”என கோஷம் எழுப்பினார்கள். உடனே மோடியின் முகத்தில் மகிழ்ச்சி.

#பாகிஸ்தான் #saynowar #nomorewar #pulwama_attack,

முகிலன் சமாதி என்று முகநூலில் தெரிவித்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

மோடிக்கு வெட்கமாக இல்லையா? – ராகுல் காட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*