பாஜகவில் அனைத்து காவலாளிகளும் திருடர்கள்தான் – ராகுல்காந்தி!

கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா முதல்வராக இருந்த போது பாஜக தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. வருமானவரித்துறையிடம் சிக்கிய டைரியில் இருந்து இந்த தகவல் ஒரு ஊடகம் ஒன்றின் மூலம் வெளியாகி உள்ளது. மொத்தம் ஆயிரத்து எண்ணூறு கோரி ரூபாய் அளவுக்கு எடியூரப்பா பணம் கொடுத்துள்ள செய்தி வெளியான நிலையில், ராகுல்காந்தி பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள எடியூரப்பா “இது காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியா, இது போலியானது” என தெரிவித்துள்ளார். பாஜக தலைமைக்கு எடியூரப்பா கொடுத்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி “பாஜகவின் அனைத்து காவலாளிகளும் திருடர்கள். நரேந்திரமோடி, அருண் ஜெட்லி, ராஜ்நாத்சிங்..” என்று பாஜக தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு சாடியுள்ளார் ராகுல்காந்தி.

#2019_elaction #நாடாளுமன்றதேர்தல் #ராகுல்காந்தி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*