பாமகவிடம் தன் கட்சியையும் வாக்கையும் இழக்கப் போகும் தேமுதிக!

பிரதான கட்சிகளுடன் மோதும் திமுக!

திமுக கூட்டணிக்கு வேல்முருகன் ஆதரவு!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கள்ளக்குறிச்சியை தவிற ஒதுக்கப்பட்ட வேறு எந்த தொகுதிகளிலும் தேமுதிக திருப்தியடையாத நிலையில், வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள தேமுதிகவின் கணிசமான வாக்குகளை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என பாமக களரமிங்கியிருக்கிறது.

பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன:-
அதிமுக போட்டியிடும் தொகுதிகள்:-

1. சேலம் 2 நாமக்கல் 3 கிருஷ்ணகிரி, 4. ஈரோடு 5. கரூர் 6. திருப்பூர் 7.பொள்ளாச்சி, 8. ஆரணி, 9. திருவண்ணாமலை, 10. சிதம்பரம் தனி, 11. பெரம்பலூர், 12. தேனி, 13. மதுரை, 14. நீலகிரி, 15.திருநெல்வேலி,16.நாகப்பட்டினம், 17.மயிலாடுதுறை, 18.திருவள்ளூர், 19.காஞ்சிபுரம், 20.தென்சென்னை

பாமக:

1.தர்மபுரி, 2.விழுப்புரம்,3.அரக்கோணம், 4.கடலூர், 5. மத்திய சென்னை, 6.திண்டுக்கல் 7.ஸ்ரீபெரும்புதூர்

பாஜக:

1.கோவை, 2. சிவகங்கை, 3. கன்னியாகுமரி, 4. இராமநாதபுரம் 5.தூத்துக்குடி

தேமுதிக:

1.வடசென்னை, 2.கள்ளக்குறிச்சி, 3. திருச்சி, 4. விருது நகர்
தமிழ் மாநில காங்கிரஸ்: 1. தஞ்சாவூர்
புதிய தமிழகம்: 1. தென்காசி
புதிய நீதிக்கட்சி: 1. வேலூர்
அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சி: 1. புதுச்சேரி

என 40 தொகுதிகளில் களமிரங்குகிறது அதிமுக, இதில் தேமுதிகவுக்கு தொகுதிகளையும் குறைத்துக் கொடுத்து கேட்ட தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கவில்லை. என்பதால் கடைசி நேரம் வரை தேமுதிக முரண்டு பிடித்தது. இறுதியில் ஒரு வழியாக கள்ளக்குறிச்சியை தேமுதிகவுக்கு பாஜக வாங்கிக் கொடுத்தது. இதே கள்ளக்குறிச்சி தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சியும் கேட்டது. இந்த விஷயத்தில் விஜயகாந்தை அமைதியாக்க அவரை கடுமையாக விமர்சித்து வந்த ராமதாஸ் நேரடியாகவே விஜயகாந்தை சந்தித்தார். என்றாலும் கள்ளக்குறிச்சியை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என பிரேமலதா கூறிய நிலையில் அத்தொகுதி கிடைத்துள்ளது. இப்போது தேமுதிக போட்டியிடும் வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருது நகர் தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் மட்டுமே தேமுதிகவுக்கு செல்வாக்கு உள்ளது. அந்த தொகுதியில் பாமகவினர் தேமுதிகவுக்கு வேலை செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அதே நேரம் வட மாவட்டங்களில் தேமுதிக பிரமுகர்களை பாட்டாளி மக்கள் கட்சி வளைக்கத் துவங்கி விட்டது. தேமுதிகவிலேயே இருங்கள் அங்கு உங்களுக்கு எதிர்காலம் இல்லை. விஜயகாந்த் பேசும் நிலையில் கூட இல்லை. அதனால் இந்த தேர்தலுக்குப் பின்னர் எங்கள் கட்சியில் இணைந்து விடுங்கள் நாம் இணைந்து பயணிக்கலாம் என இப்போதே பாமக தன் அரசியல் பணிகளை துவங்கி விட்டது. பாஜக மீதான மோகத்தில் தேமுதிக தன் கட்சியை பாமகவிடம் இழக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.

#2019_elaction #Dmk_parliment_elaction #2019_parliment_elaction #2019_elaction  #pmk_vs_dmdk

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*