பாமகவில் பிளவு – செல்வாக்கு மிக்க பெருந்தலைகள் திமுகவில் இணைந்தனர்!

தினகரன் எரிப்பு வழக்கு -பாளை சிறையில் உள்ள அட்டாக் பாண்டிக்கு ஆயுள்!

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

பாமகவின் துணை பொதுச்செயலாளரும், ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசு, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.வேலு ஆகியோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.அதிமுக பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ள நிலையில் வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள பல தலைவர்கள் திமுகவில் இணைந்து வருவது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாமகவும் அதன் தலைவர் ராமதாஸ் அவர்களும் பல ஆண்டுகளாக திமுக, அதிமுகவுன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்தனர்.  அதிமுகவோடு கூட்டணி வைப்பது தாயை உறவு கொள்வதற்கு சமம் என்று கூட உச்சக்கட்டமாக வார்த்தைகளை உதிர்த்தார் ராமதாஸ்.

ராமதாஸின் இந்த வார்த்தைகளை தமிழக மக்களும் பாமகவினரும் நம்பினார்கள்.  அல்லது, இதனால் அவருக்கு அரசியல் அரங்கில்  இமேஜ் கூடியது.  அது போல நீட் எதிர்ப்பு, எட்டுவழிச்சாலை எதிர்ப்பு என பாஜக, அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை அன்புமணி நடத்தி வந்ததால் மக்களும் இதை நம்பிய நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளோடும் பாமக கூட்டணி பேரம் பேசியது. 7 நாடாளுமன்ற தொகுதிகளை கொடுக்க திமுக முன் வந்த நிலையில், கூடுதலாக ஒரு ராஜ்யசபா எம்.பியையும் சேர்த்துக் கொடுப்போம் என அதிமுக வாக்குறுதி கொடுத்ததால் அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக.

இது  தமிழக மக்களையும் ராமதாஸ் சாதி மக்களையும் அதிர்ச்சியடைய வைத்த நிலையில், பாமகவில் இருந்து பலரும் விலகினார்கள். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சேலத்தில் வைத்து பாமகவின் முன்னாள்  ஓமலூர் எம்.எல்.ஏ தமிழரசு திமுகவில் இணைந்தார். மேலும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.வேலு ஆகியோரும் திமுகவில் இணைந்துள்ளனர்.  இது பாமகவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தருமபுரி தொகுதியில் அன்புமணி களமிரங்கியிருக்கும் நிலையில் செல்வாக்கான பல தலைவர்கள் விலகி திமுகவில் இணைந்து வருவது ராமதாஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

#அன்புமணி_ராமதாஸ் #2019_நாடாளுமன்றதேர்தல் #தருமபுரி_தொகுதி #பாமகவில்_பிளவு

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கை!

அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*