பெரியகுளம் தொகுதியை பல கோடிக்கு விற்ற விஜயபாஸ்கர்!

பாமகவில் பிளவு – செல்வாக்கு மிக்க பெருந்தலைகள் திமுகவில் இணைந்தனர்!

பெரிய குளம்  சட்டமன்ற  தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு, இப்போது அவர் மாற்றப்பட்டு மயில்வேல் என்ற புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் உருவாக்கி உள்ளது.துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதி பெரியகுளம். அந்த தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலின் முருகன் என்பவர் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்த கொஞ்ச  நேரத்திலேயே அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

பெரியகுளத்தில் சீட் எதிர்பார்த்து காத்திருந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அறிவிக்கப்பட்டுள்ள முருகன் பெரியகுளம் தொகுதி ஆளே இல்லை. அவர் சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர். அவரை எப்படி ஏன்  எதற்காக பெரியகுளத்தில் நிறுத்துகிறார்கள் என கட்சியினர் குழம்பிப் போனார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் பணம் பெற்றுக் கொண்டு முருகனை பெரியளகுளம் தொகுதியில் தலையில் கட்டி விட்டார் என்று பெரியகுளம் பிரமுகர்கள் அதிமுக தலைமையகத்திற்கு படையெடுத்தார்கள். வேட்பாளரை மாற்றுங்கள் அல்லது கூண்டோடு பதவி விலகுவோம் என்று அறிவித்தனர்.

இந்த பிரச்சனையை கேள்விப்பட்ட தினகரன் தரப்பு பெரியகுளம் அதிமுகவினரை தொடர்பு கொண்டு ஒரு ரவுண்டும் பேசி விட்டனர். உளவுத்துறை மூலம் தகவலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்து. உடனடியாக வேட்பாளரை மாற்றுங்கள் என்றார். ஏற்கனவே வேட்பாளராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர் கதிர்காமு  மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிட, முருகனோ தான் பார்த்து வந்த அரசுப்பணியை ராஜிநாமா செய்யவும் தயாராகி விட்ட நிலையில், அதிர்ந்து போன அதிமுக பெரியகுளம் தொகுதிக்கு அறிமுகம் ஆன மயில்வேலை வேட்பாளராக்கி இருக்கிறது. கொஞ்சம் அசந்திருந்தாலும் பெரியகுளம் அதிமுக தினகரனோடு ஐக்கியமாகியிருக்கும்.

#பெரியகுளம்_இடைத்தேர்தல் #மினிசட்டமன்றதேர்தல் #2019_மினி_சட்டமன்றதேர்தல்

தினகரன் எரிப்பு வழக்கு -பாளை சிறையில் உள்ள அட்டாக் பாண்டிக்கு ஆயுள்!

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கை!

அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*