பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த கும்பல்!

இந்துக்களை இழிவு செய்த அமைச்சர் மீது பாக் பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை!

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண்களோடு பழகி நூற்றுக்கணக்கான பெண்களை காதலிப்பது போல நடித்து கும்பலாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகியோர் கைதாகி உள்ளார்கள். இந்த கும்பலின் தலைவன் எனக் கருதப்படும் திருநாவுக்கரசு இன்று பொள்ளாச்சி வந்த போது கைதானார். இந்த கும்பலுக்கும் அதிமுக பிரமுகர் பார் நாகராஜனுக்கும் மேலும் சில அதிமுக பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த செய்தியை அதிமுக தலைவர்களுள் ஒருவரான பொள்ளாச்சி ஜெயராமன் மறுத்திருக்கிறார் பார் நாகராஜ் அதிமுக பிரமுகராகவே பொள்ளாச்சியில் வலம் வந்திருக்கிறார். இவர் பொள்ளாச்சி ஜெயராமனின் வலதுகரமாகவும் செயல்பட்டுள்ளார்.


இந்த கும்பல் பெண்களிடம் காதலிப்பது போல பழகி பின்னர் தனியாக அழைத்துச் சென்று அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு அதை விடியோவாக எடுத்த பின்னர் அவர்களை மிரட்டியே பாலியல் தேவைகளுக்காகவும், பணத்திற்காகவும் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் சிக்கி அவர்களின் விடியோக்கள் பொள்ளாச்சி பகுதியில் பல பிரமுகர்களிடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

#பொள்ளாச்சி_ஜெயராமன் #பார்_நாகராஜன் #பெண்களை_சீரழித்தகும்பல்

அதிமுகவில் இழுபறி – தொகுதி பங்கீட்டை முடித்த திமுக!

பாகிஸ்தான் மீது தாக்குதல் தேர்தல் பரப்புரையை திவீரமாக்கிய மோடி!

ஹிரோ போல நடிப்பதை நிறுத்துங்கள் – மோடி மீது நடிகர் சித்தார்த் விமர்சனம்!

தேர்தலுக்கு முன்னர்  எழுவர் விடுதலை?

முகிலன் சமாதி என்று முகநூலில் தெரிவித்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

மோடிக்கு வெட்கமாக இல்லையா? – ராகுல் காட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*