மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி -பின்னணி தகவல்கள்!

விஜயகாந்தை வைத்து கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றினாரா பிரேமலதா?

வைகோ தலைமையிலான மதிமுக நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் வழங்கவும் திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இழுபறி நீடித்து வந்த நிலையில் மொடக்குறிச்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஈரோடு வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.

திமுகவுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தான போதிருந்தே திமுக வினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வைகோவை வலியுறுத்தி வந்தனர். ஆனால். அவர் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என அறிவித்தார். திமுகவின் மூத்த தலைவர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றோர் கணேசமூர்த்தியை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டதோடு, ஸ்டாலினே வைகோவிடம் “பம்பரம் சின்னம் இல்லாத நிலையில், தேர்தல் கமிஷன் வழங்கும் ஏதோ ஒரு புதிய சின்னத்தில் களமிரங்கி. குறுகிய நாட்களுக்குள் சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று போட்டியிடுவதை விட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதுதான்” நல்லது என்று எடுத்துக் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கட்சியின் தலைவர் அதே கட்சியின் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையையும் சுட்டிக்காட்டி வைகோவிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு ஏற்ப தனிச்சின்னத்திலேயே போட்டியிடுங்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த முடிவில் சம்மதமில்லாத வைகோ பின்னர் ஓரளவு சூழலை புரிந்து கொண்டு கணேச மூர்த்தியை தொடர்பு கொண்டு “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்பதை நீங்களே அறிவித்து விடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
அதன் பின்னர்தான் கணேச மூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என அறிவித்திருக்கிறார்.ஈரோட்டில் மதிமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

#மதிமுக #நாடாளுமன்றதேர்தல் #திமுக_மதிமுக_கூட்டணி

பாமகவில் பிளவு – செல்வாக்கு மிக்க பெருந்தலைகள் திமுகவில் இணைந்தனர்!

தினகரன் எரிப்பு வழக்கு -பாளை சிறையில் உள்ள அட்டாக் பாண்டிக்கு ஆயுள்!

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கை!

அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*