”மரங்களை முறித்து விட்டார்கள்” -இந்தியா மீது ஐநாவில் பாகிஸ்தான் புகார்!

வந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன?

புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தான் இந்திய எல்லையில் போர் பதட்டம் உருவானது. இரு நாடுகளும் பரஸ்பரம் விமான தாக்குதலில் ஈடுபட்டன. பாகிஸ்தானின் சிந்து நதியை ஒட்டிய பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியதில் 350 திவீரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய தரப்பு கூறியது. ஆனால், ஒரு உயிரிழப்பு கூட இல்லை, பைன் மரங்களும் சில காகங்களும் இறந்துள்ளன என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்த செய்தியை பிபிசி , அல்ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்களும்,ராய்ட்டர்ஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் கள ஆய்வுகளும் தெரிவித்தன. இந்நிலையில், பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று இரவு 9 மணி அளவில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பால்கோட் பகுதியில் இந்திய விமானங்கள் நடத்திய தாக்குதலில் பால்கோட் சுற்றுலா தலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பைன் மரங்கள் சேதம் அடைந்துள்ளாதாகவும், எக்கோ டூரிசத்திற்கு இதனால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா அவையில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் சுற்றுச்சூழல் அமைச்சர் மாலிக் அஸ்லாம் இது தொடர்பாக பேசும் போது “ இந்திய விமானங்கள் எங்கள் வனப்பகுதிகள் மீது நடத்திய தாக்குதலில் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நடந்தது சூழலியல் திவீரவாதம் “eco-terrorism” இந்த தாக்குதல் தொடர்பாக ஐநா அவையில் புகார் கொடுத்துள்ளோம்” என்று அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போரில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் சர்வதேச விதிகளின் படி தண்டனைக்குரிய குற்றம் என்கிறது ஐநா. இந்த விதியைப் பயன்படுத்தியே இந்தியா மீது பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
#Eco_terrorism #Indo_Pak_War #Abinandan

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*