மிஷன் சக்தி விண்வெளி சோதனை வெற்றி –மோடி அறிவிப்பு!

எடப்பாடியின் காவலாளிதான் மோடி- ஸ்டாலின் மாஸ்!

விண்வெளிப்போருக்கு இந்தியா தயாராகி விட்டதாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் மோடி முக்கியமான அறிவிப்பு ஒன்றை நாட்டு மக்களுக்கு வெளியிடப்போவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், 12 மணிக்கு உரையாற்றிய மோடி,

நாட்டு மக்களுக்கு மோடி உரை என்றதும், கடந்த தேர்தலில்   கருப்புப் பணத்தை ஒழித்து நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவேன் என்று மோடி  தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், கருப்புப் பணத்தின் பெயரால் நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுமார் 15 அப்பாவி இந்திய ஏழைகளின் உயிரை எடுத்ததோடு இன்றுவரை மக்கள் துயரத்தில் உள்ளார்கள். அது போன்ற ஏதேனும் அதிரடி அறிவிப்பை மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  மிஷன் சக்தி என்ற  செயற்கைக் கோள் சோதனை வெற்றி என்ற செய்தியை வெளியிட்டார்.

அவர் உரையாற்றும் போது,

“குறைந்த உயர சுற்று வட்டப்பாதையில்   செயற்கைக் கோளை நிறுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், உலக அளவில் விண்வெளித்துறையில் இந்தியா நான்காவது பெரிய நாடாக முன்னேறியுள்ளது. விண்வெளியில் ஆயுதங்கள் குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்காப்புக்காகவே இந்தியா இந்த  சோதனையை நடத்தியது. விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக் கோளை வீழ்த்தக் கூடிய வல்லமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த  விண்வெளி சோதனையை 3 நிமிடத்தில் இந்தியா சாதித்துள்ளதாக” மோடி தெரிவித்தார்.

மோடியின் இந்த விண்வெளி அறிவிப்பு பெரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. காரணம் தேர்தலில் இந்த விண்வெளி சாதனை அறிவிப்பு ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகம்தான்.

#விண்வெளிசோதனை #மோடி #2019_நாடாளுமன்றதேர்தல்

ராதாரவி சஸ்பெண்ட் உண்மை பின்னணி என்ன?

மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி -பின்னணி தகவல்கள்!

விஜயகாந்தை வைத்து கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றினாரா பிரேமலதா?

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*