முகிலன் சமாதி என்று முகநூலில் தெரிவித்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

மோடிக்கு வெட்கமாக இல்லையா? – ராகுல் காட்டம்!

சுற்றுச் சூழல் ஆய்வாளரும், மக்கள் போராளியுமான முகிலன் காணாமல் போய் இரு வாரங்களுக்கு மேலாகிறது. இந்நிலையில், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முகிலன் எங்கே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்படி முகிலன் எங்கே என்று தோழர் ஒருவர் இட்ட பதிவில் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் நாகராஜன் /சமாதி/ என்று கமெண்டில் பதிவிட்டுள்ளார். அதன் கீழே கொன்று விட்டீர்களா?என்று பலரும் கேள்வி எழுப்ப அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறார் நாகராஜன்.

திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்

இதையே சில அமைப்பிடன் சிபிசிஐடி போலீசிடம் கொடுக்க அவர்களோ திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளருக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளார்கள். முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் காவல்துறை அதிகாரிகள் பல விதமான கருத்துக்களை எழுதுகிறார்கள். பல நேரங்களில் என் கவுண்டருக்கு ஆதரவாகவும் எழுதுகிறார்கள். அதே போன்றுதான் முகிலன் பதிவில் சமாதி என்று எழுதியிருக்கிறார் திருப்பரங்குன்றம் ஆய்வாளர். உண்மையிலேயே திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளருக்கும் முகிலன் காணாமல் போனதற்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகி இருந்தாலும். இந்த விவகாரத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.
#முகிலன்_எங்கே #Where_is_muhilan

காஷ்மீர் எல்லையோர மக்களின் வாழ்வு பற்றிய பிபிசி ரிப்போர்ட்!

பதிலடி கொடுப்போம் -மோடி தேர்தல் பிரச்சார உரை!

மசூத் அஸ்கர் காஷ்மீர் சிறையிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு தப்பித்த கதை!

இம்ரான்கானுக்கு முஸ்லீம் தலைவர் ஓவைசி கண்டனம்!

வந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*