மோடிக்கு வெட்கமாக இல்லையா? – ராகுல் காட்டம்!

காஷ்மீர் எல்லையோர மக்களின் வாழ்வு பற்றிய பிபிசி ரிப்போர்ட்!

பதிலடி கொடுப்போம் -மோடி தேர்தல் பிரச்சார உரை!

இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானம் சேர்க்கப்படாமல் தாமதம் ஆக பிரதமர் மோடியே காரணம். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து அவர் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கடுமையாக பிரதமர் மோடியை சாடியுள்ளது.
முன்னதாக, காஷ்மீர், பாகிஸ்தான் எல்லையில் மிராஜ் ரக போர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ரஷ்ய தயாரிப்பான மிராஜ் போர் விமானங்கள் போர் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல, என்ற கருத்தும் உருவானது.
புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் பகுதிக்குள் தாக்குதல் நடத்திய மிராஜ் ரக இந்திய விமானங்கள் விபத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதல் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி “ரஃபேல் போர் விமானம் இன்று இருந்திருந்தால் நிலமை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கிறார்கள்” என்று குற்றம் சுமத்தினார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி:-
“ரஃபேல் போர் விமானம் இந்தியா வர தாமதமாக மோடியே காரணம். அவர்தான் இதற்கு முழு பொறுப்பு. பிரதமர் மோடிக்கு வெட்கம் இல்லையா?. முப்பதாயிரம் கோடியை திருடி அனில் அம்பானிக்குக் கொடுத்துள்ளார்.ரஃபேல் போர் விமானம் இருந்திருந்தால் ஏன் அவர் மிக் ரக பழைய விமானத்தில் போகிறார்”என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் முந்தைய காங்கிரஸ் அரசால் செய்யப்பட்டது. அதை ரத்து செய்த மோடி அரசு அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் என் ஜினியரிங் நிறுவனத்தை இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக்கி விட்டு தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை இணைத்து அதன் உரிமையாளர் அனில் அம்பானிக்கு முப்பதாயிரம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்ததோடு அதிக தொகைக்கு ரஃபேல் போர் விமானங்களையும் வாங்க உள்ளதாக பிரான்ஸ் ஊடகங்களே செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

#Rafale ##Rafale_deal #ரஃபேல்_போர்விமான_ஊழல்

மசூத் அஸ்கர் காஷ்மீர் சிறையிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு தப்பித்த கதை!

இம்ரான்கானுக்கு முஸ்லீம் தலைவர் ஓவைசி கண்டனம்!

வந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*