“மோடிதான் எங்கள் டாடி” லேடியை கைவிட்ட ராஜேந்திரபாலாஜி!

தருமபுரியில் சவுமியா அன்புமணி- பின்னணி தகவல்கள்!

இன்று பெண்கள் தினம்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் தலைவர் ஜெயலலிதா “லேடியா மோடியா?” என்று கேள்வி எழுப்பிய நிலையில் அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா எதிர்த்த மோடிதான் எங்கள் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மறுத்த ஜெயலலிதா மோடியா லேடியா என்று கேள்வி எழுப்பினார். மோடிக்கு தன் ஆதரவையும் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஜெயலலிதா வழங்கவில்லை. மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில் தீடீரென உடல் நலம் குன்றி இறந்தார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் மகாராஜபுரம் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“ கடந்த 40 நாட்களில் நான்குமுறை பிரதமர் தமிழகம் வந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறார். ஓகி. கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட போது மக்களுக்கு தமிழக அரசே அனைத்து உதவிகளையும் செய்து விட்டது. எனவே பிரதமர் வரவேண்டிய அவசியம் இல்லை. ரஃபேல் போர் விமான ஊழல் ஒரு கற்பனை. சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி மரியாதைக்குரிய தலைவர் அவர் பெயர் வைப்பதில் எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை.
தமிழக மக்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத நிலையில் “மோடிதான் இப்போது எங்களுக்கு டாடி” அவர் இந்தியாவின் டாடி என்றார். ஜெயலலிதா மரணத்தின் பின்னர் பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. அதிமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் எத்தனை தொகுதிகள் அதிமுக போட்டியிட வேண்டும். யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அதிமுகவின் ஒவ்வொரு அசைவுகளையும் பாஜகவே தீர்மானித்து வரும் நிலையில் அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்து வந்த நிலையில், அதை கைவிட்டு மோடியை டாடி என்று அழைத்திருக்கிறார்கள்.

#modi_vs_amma #Daddy_admk #modi_admk

மறைவில் நள்ளிரவும் கூட்டணி பேரம் பேசியது யார்? – ஸ்டாலின்!

“பணத்துக்காக ராமதாஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார்” -பண்ருட்டி வேல்முருகன்

காட்டுகிறார் மோடி – விருதுநகரில் மிரட்டிய ஸ்டாலின்!

 

 

 

தேமுதிகவின் வலிமை விஜயகாந்தின் சுகவீனம்தான்!

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த கும்பல்!

இந்துக்களை இழிவு செய்த அமைச்சர் மீது பாக் பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*