ரஃபேல் ஆவணங்கள்  திருடு போயுள்ளன – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு நான்கு தொகுதிகள்?

தேமுதிகவின் வலிமை விஜயகாந்தின் சுகவீனம்தான்!

ரஃபோர் போர் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாகவும், காணாமல் போயுள்ளதாகவும் மத்திய அரசின் அட்டர்ஜி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அதிச்சியை உருவாக்கியுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மீதான உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்ஜி  ஜெனரல் கே.கே.வேணுகோபால்,

“ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு  சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து களவாடப்பட்டுள்ளன. அவைகள் கிளாசிபைட் ஆவணங்கள். ஆகவே அவற்றை வெளியிடுவது அதிகாரபூர்வமாக சட்டத்தை மீறும் செயலாகும். எனவே அந்த ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளியிடுபவர்கள் குற்றவாளிகள். இதில் நீதிமன்ற அவதிப்பும் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அடுத்தடுத்து ஆவணங்களை வெளியிட்ட தி இந்து ஆங்கில நாளிதல் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்தது. மத்திய அரசு இந்து பத்திரிகை வெளியிட்ட ஆவணங்கள்தான் திருடப்பட்டவை என்றும், சட்டத்திற்குரிய குற்றம் என்றும் வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி கே.எம். ஜோசப்:-

“திருடப்பட்ட ஆவணமாக இருந்தாலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். ஊழல் நடந்திருந்தால் நிச்சயம் அது பற்றி விசாரிப்போம். அப்போது தேசிய பாதுகாப்பு என்று  ஒழிந்து கொள்ளக் கூடாது” என வழக்கை ஒத்தி வைத்தார்.

#ரஃபேல்_ஊழல் #Rafel_Dea #பாஜக_ஊழல்

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த கும்பல்!

இந்துக்களை இழிவு செய்த அமைச்சர் மீது பாக் பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*