ராதாரவி சஸ்பெண்ட் உண்மை பின்னணி என்ன?

மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டி -பின்னணி தகவல்கள்!

விஜயகாந்தை வைத்து கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றினாரா பிரேமலதா?

கொலையுதிர்காலம் பட வெளியீட்டு விழாவில் நடிகை நயன் தாரா தொடர்பாக நடிகர் ராதாரவி பேசியது  தொடர்பாக  திமுகவில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் நயன் தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இருந்தாலும் கூட திமுக  நயன் தாரா பற்றி ராதாரவி பேசியதை ஒரு காரணமாகக் காட்டியதே தவிற உண்மையான காரணம் இதுவல்ல என்கிறார்கள்.

அதிமுக திமுக என மாறி மாறி பயணிக்கும் ராதாரவி ஜெயலலிதா மரணத்தின் பின்னர் திமுகவுக்கு வந்தார். அங்கு அவருக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் சரத்குமாரிடம் ராதாரவி திமுகவில் உள்ள தன் மனக்குமுறலை கொட்டியதாக  தெரிகிறது. சரத்குமாரோ துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு போன் பண்ணி புலம்பியிருக்கிறார். கூடவே ராதாரவி பற்றியும் பேசியிருக்கிறார்.

ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் சரத்குமாரின் வீட்டிற்கு நேற்று சென்ற பன்னீர்செல்வம் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு  வாருங்கள். சட்டமன்ற தேர்தலில் கவுரமான இடம் தருகிறோம். இப்போது நீங்கள் உதவுங்கள் . ராதாரவியையும் அழைத்து வந்து விடுங்கள். பிரச்சாரத்திற்கு அவர் உதவியும் தேவைப்படும் என்று பேசியிருக்கிறார்.

ராதாரவியும் அதிமுக பக்கம் போய் விடலாமா என்றொரு யோசனையில் இருந்த போதே நயன் தாரா சர்ச்சையில் சிக்க விக்னேஷ் சிவன்  திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதியை தொடர்பு கொண்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுங்கள் என்று சொல்ல  அதை தன் தந்தையின் கவனத்திற்கு கொண்டு செல்ல இப்போது சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார் ராதாரவி.

 

#ராதாரவி  #Radaravi #Nayanthara #kolaiyuthirkalam  #Kolaiyuthir_Kaalam

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*