வந்தார் அபிநந்தன் –இராணுவ நடைமுறை என்ன?

இந்தியா விமானப்படையில் விங் மாஸ்டரான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.  அவரை வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் இன்று மதியம் 12 மணியளவில் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒபப்டைக்கப்படுகிறார். இஸ்லாமாபாத்தில்  இரு வாகா எல்லைக்கு அபிநந்தனை அழைத்து வந்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரை வரவேற்க  தேசியக் கொடிகளுடன் வாகா எல்லையில் திரண்டிருக்கிறார்கள்.ஆனால், இரவு 9 மணிக்கு மேல் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரை இந்திய இராணுவ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் நிலையில்  அதன்  முதல்வர்  அமரிந்தர்சிங் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லைக்குச் செல்கிறார். பெருமளவு மக்களும், விமானப்படை அதிகாரிகளும் திரண்டிருக்கும் நிலையில்  அபிநந்தனை வரவேற்க பிரதமர் மோடி செல்லவில்லை. அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் நிலையில், ராணுவ அமைச்சரோ, பாஜக அமைச்சரவையில் உள்ளவர்களோ அபிநந்தனை வரவேற்கச் செல்லவில்லை.

அபிநந்தன் அந்நிய நாட்டு எல்லைக்குள் விழுந்து அந்நிய நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர் வாகா எல்லைக்குள் வந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும் அப்படியே அவரை பணிக்கோ, அல்லது உறவினர்களுடனோ அனுப்பி விட மாட்டார்கள்.முதலில் அவரை இராணுவ மருத்துவமனையில் வைத்து முழு உடற்பரிசோதனையும் , உளவியல் பரிசோதனைகளும் நடத்துவார்கள். அடுத்த சில நாட்கள் வரை அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில்தான் இருப்பார். அதன் பின்னர், அவரை பாதுகாப்பு உயரதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் டெல்லியில் வைத்து விசாரணை நடத்துவார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை இந்த விசாரணை நீடிக்கும். இது ராணுவ நடைமுறை.அதன் பின்னர் அவர் பணிபுரிந்த காஷ்மீர்  முகாமுக்கு அனுப்பப்படுவாரா அல்லது ராணுவத்தின் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவாரா என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும். ஆனால், அவரை அழைத்து வர சென்னையில் இருந்து அவரது குடும்பத்தினர் வாகா எல்லைக்குச் சென்றுள்ளார்கள்.

#அபிநந்தன் #Vaga_Border #Abinandan

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன்!

“ஞானத்துடன் நடந்து கொள்வோம்” -பாக் பிரதமர் இம்ரான்கான் உரை!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*