விஜயகாந்தை வைத்து கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றினாரா பிரேமலதா?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார். ஆனால், பேச மாட்டார் என்று முதலில் கூறி வந்த பிரேமலதா விஜயகாந்த் இப்போது அவர் பிரச்சாரத்திற்கும் வர மாட்டார் என்று அறிவித்திருப்பது கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
பாஜக-அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டியிடுகிறார். கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் வெற்றி பெறுவதே கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கிய போது விஜயகாந்தின் உடல் நிலையை வைத்தே தேமுதிகவுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸோ வட மாவட்டங்களில் இருக்கும் தேமுதிக வாக்குகள் தம் கட்சிக்கு கிடைக்க வேண்டுமென்றால் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் தலை காட்ட வேண்டும் என்று விரும்பினார். அதிமுகவினரும் இதை விரும்பிய நிலையில் தேர்தல் பேரம் முடியும் வரை பிரேமலதா விஜயகாந்த் நிச்சயம் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார். ஆனால், அவரால் பேச முடியாது என்றார். அதிமுக, பாமகவினரும் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார் என நம்பி சுதீஷுக்காக பிரச்சாரம் செய்தனர். ஆனால்,தீடிரென விஜயகாந்தின் உடல் நிலை பிரச்சாரத்திற்கு உகந்ததாக இல்லை. மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டார்கள். எனவே அவர் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என்று கூறி விட்டார். விஜயகாந்த் இல்லாத தேர்தல் களத்தால் தேமுதிக வினர் சோர்வடைந்துள்ளார்கள். கூட்டணிக் கட்சியினரும் பிரச்சாரத்திற்கு ஸ்டார் அந்தஸ்துள்ள விஜயகாந்தை நம்பியிருந்த நிலையில் இப்போது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதால் சோர்வடைந்துள்ளனர்.
#தேமுதிக #விஜயகாந்த்_உடல்நிலை #2019_நாடாளுமன்றதேர்தல் #அதிமுக_பாஜக_கூட்டணி

பாமகவில் பிளவு – செல்வாக்கு மிக்க பெருந்தலைகள் திமுகவில் இணைந்தனர்!

தினகரன் எரிப்பு வழக்கு -பாளை சிறையில் உள்ள அட்டாக் பாண்டிக்கு ஆயுள்!

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மரணம்!

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கை!

அதிமுக தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*