வைகோ மீது பாஜகவினர் தாக்குதல் –வேடிக்கை பார்த்த போலீஸ்!

மோடி குமரி வருகை –வைகோ கருப்புக்கொடி, டிரெண்டிங் ஆன #Gobackmodi

”போரிலும் சண்டையிலும் செலவு செய்ய நான் விரும்பவில்லை” -இம்ரான்கான் உரை!

குமரிக்கு வரும் மோடிக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லை, குமரி எல்லையான காவல்கிணறு அருகே கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார்.வைகோவுடன் மதிமுக தொண்டர்களும் கணிசமான அளவு கலந்து கொண்ட நிலையில்  பாஜகவிர் மதிமுகவினர் மீது கற்களை வீசி கலவரச் சூழலை ஏற்படுத்தினார்கள். வைகோ போராட்டத்தின் போது பாஜகவினர் கற்களை வீசியதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். இதனால் உற்சாகம் அடைந்த பாஜக வினர் காவல்துறையினர் முன்னிலையிலேயே மதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

சூழல் மோசமானதைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக வைகோ தாமாக முன் வந்து போலீசில் கைதானார்.

”காவிரி, மேகதாட்டு அணை, ஹைட்ரோகார்பன் ,  உள்ளிட்ட விவகாரங்களில் துரோகம் செய்த மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுகிறோம்” என்று பேசி விட்டு கைதானார் வைகோ.

எது பெஸ்ட் குக்கரா இரட்டை இலையா?

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*